Good Bad Ugly: ரெட் டிராகன் அஜித்தின் அடங்காத வசூல்! 150 கோடி ரூபாயை எட்டிய குட் பேட் அக்லி!
நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வார இறுதி நாளின் முடிவில் ரூபாய் 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
150 கோடியை நெருங்கிய குட் பேட் அக்லி:
ரசிகர்களின் தொடர்ச்சியான பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக குட் பேட் அக்லி படம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமினறி கேரளா, கர்நாடகம். ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
படம் வெளியாகி வார இறுதி நாட்களில் மட்டும் 145 கோடி ரூபாய் வரை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பாக்ஸ ஆபீஸ் தரவுகளை வெளியிடும் காம்ஸ்கோர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான 3 நாட்களில் குட் பேட் அக்லி படம் 145 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.
வெளிநாடுகளிலும் வசூல்:
#AK 's #GoodBadUgly makes it to #Comscore Global April 13th weekend Top 10 Box office chart..
— Ramesh Bala (@rameshlaus) April 14, 2025
At No.4
From 18 territories, WW weekend estimates are $16.78 Million [ ₹ 145 Crs].. pic.twitter.com/L1PfgEbmkm
படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த வசூல் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், வெளிநாட்டில் வசூல் நிலவரம் குறித்து மைத்ரி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு அமெரிக்காவில் மட்டும் குட் பேட் அக்லி படம் 1 மில்லியன் டாலரை வசூல் கடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்த படம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ப்ரான்ஸ் உள்பட மொத்தம் 18 நாடுகளில் ரிலீசாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் மே 1ம் தேதிதான் மிகப்பெரிய படம ரிலீசாகிறது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் வரும் 1ம் தேதி ரிலீசாகிறது.
தொடரும் வசூல் வேட்டை:
வரும் 18ம் தேதி நடிகர் விஜய்யின் சச்சின் ரி ரலீஸ் ஆகிறது. இதுதவிர இந்த மாதம் பெரியளவில் எந்த படமும் ரிலீசாகவில்லை. இதனால், இந்த மாத இறுதி வரை குட் பேட் அக்லி படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது.
இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜுன்தாஸ் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், ஷைன் சாக்கோ, யோகி பாபு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். பிரபு, சுனில், பிரசன்னா, ஜாக்கி ஷெராஃப், பிரியா வாரியர், கார்த்திகேயா தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.





















