20 Years Of Citizen: மேற்கே உதித்த சூரியனும்... அஸ்தமித்த ஆஸ்திரேலியாவும்! சிட்டிசன் பாடல்கள் ரீவைண்ட்!

சிட்டிசன் படத்தின் வெற்றியில் அதன் பின்னணியும் இசையும் முக்கிய பங்காற்றும். அந்த வகையில் தேனிசை தென்றல் தேவாவின் இந்த பிளே லிஸ்ட் அஜித் ஹிட் வரிசையில் முக்கியமானவை.

சிட்டிசன் படத்தில் இசைதென்றல் தேவா தான் இசையமைத்தார் என்று கூறினால் இன்றும் அதை அபேஸ் டியூன் என்றெல்லாம் விமர்சனம் செய்பவர்கள் உண்டு. அந்த அளவிற்கு, வேறு ஒரு ஜானரில் பாடல்களில் பட்டையை கிளப்பியிருப்பார் தேவா. சிட்டிசனில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அனைத்தும் ஹிட் ரகம். பின்னணி இசை இன்னும் உருக வைக்கும்.  20 ஆண்டுகளுக்குப் பின் சிட்டிசன் பாடல்களை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். எப்போதும் ரசிக்கும் பிளே லிஸ்ட் அது. 


20 Years Of Citizen: அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக்கிய ‛சிட்டிசன்’ ; விமர்சனங்களை உடைத்தெறிந்த சுப்புரமணி!


1.மேற்கே விதைத்த சூரியனே...‛‛கூட்டுப்புழு
கட்டிக்கொண்ட கூடு
கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால்
சிறகு வரும் மெல்ல

ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே
வானம் பெரிதல்ல...

இதயம் துணிந்து
எழுந்த பின்னாலே இமய
மலை உந்தன் இடுப்புக்கு
கீழே

நரம்புகள் வரம்புகள்
மீறி துடிக்கட்டும் விரல்களில் எரிமலை வெடிக்கட்டும்!’’

வைரமுத்து வரிகளில் திப்பு குரலில் மேற்கே உதித்த சூரியன் இப்போது கேட்டாலும் நரம்பு புடைக்க வைக்கும்.

 2.ஹே... ஐ லைக் யூ...


‛‛பார்த்தவுடன் உயிர்
உடைத்து விட்டாய் ஐ லைக்
யூ ஐ லைக் யூ பார்வைகளால்
என்னை துகில் உரித்தாய் ஐ
லைக் யூ ஐ லைக் யூ


புத்தம் புத்தம் புது
உதடுகளை குத்தும் குத்தும்
உன் மீசை என்னை ஐயோ
ஐயோ ஐ லைக் யூ ஐ லைக் யூ...’’


ஆங்கிலத்தை அள்ளித்தெளித்து இளசுகளை கொதிக்க வைத்த இந்த பாடல், வசுந்தரதாஸ் பாடி நடித்தது!3.பூக்காரா... பூக்காரா...


வெண்பா கேட்டால்
பெண்பா சொல்லும்
முக்கால் கவிஞன் நான்
சந்நியாசி சம்சாரி ரெண்டும்
நான்நீ ஒற்றை முடியால்
தேரை இழுப்பாய் கட்டை
விரல் அசைவில் காரியம்
முடிப்பாய்இளமையினாலே
இமயத்தை உடைப்பாய்
வளைவுகளாலே
வானத்தை வளைப்பாய் வயசு பயல்
மேல் மையம் கொள்ளும்
வங்க புயலும் நான்
முனிவர்களும் துருவாத
முத்தம் நான்


இந்த வரிகள் எல்லாம்... அப்போதே வேறு ரகத்தில் பாராட்டை பெற்றவை!4.சிக்கி முக்கி கல்லு மோதுதே...


‛‛என் பசி அறிந்து பால்
குடத்தை பக்கம் வைத்து போனவர்
யாரோ நம்மை பூவுக்குள்ளே பூட்டி
வைத்து சாவியை தொலைத்தவர்
யாரோ


ஓ முத்த ஈரத்திலே
ஈரத்திலே எரிமலை அணைத்தது
யாரோ உன் உதட்டு வழி
பள்ளங்களில் என் உயிரை
புதைத்தது யாரோ நீ நீ தானா


தேகத்தை இணைத்தது
காவல் துறை மோகத்தை
வளர்த்தது காமன் துறை கை
நான்கும் மெய் ரெண்டும்
பின்னும் வேலை


அப்போது சபதம்
கொண்டேன் இப்போதோ
சலனம் கண்டேன் பெண்
மூச்சு காற்று மோதி மோதி
காடு எரிய கண்டேன்..’’


காட்டுக்கும் ஒழிந்திருக்கும் போது வரும் பாடல். ஆனால் காடு பற்றி எரியும் அளவிற்கான வரிகள் இருக்கும். இசை இன்பமயம்.5.ஆஸ்திரேலியா தேசம் வரை


இந்த பாடல் படத்தில் இருக்காது. ஆனால் கேசட்டில் முதல் பாடல் இது தான். ஹரினியின் குரல் பாடலை வேறு எங்கோ கொண்டு செல்லும். உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த பாடல் படத்தில் வைத்திருக்கலாம். ஆனால் பாடல் வைக்காமலேயே 3 மணி நேரத்தை நெருங்கியிருக்கும். நேரம் கருதி பாடலை தவிர்த்திருப்பார்கள்.  இந்த பாடலை பார்க்க முடியாது. கேட்க மட்டுமே முடியும். அந்த வகையில் நீங்கள் பலர் இந்த பாடலை கேட்டிருக்க வாய்ப்பில்லை. சிலர் கேட்டிருந்தாலும், அது இந்த படமா என அறியாமல் இருந்திருப்பீர்கள். கேளுங்கள், என்றும் ரசிப்பீர்கள். 


20 years of Citizen: அத்திப்பட்டி சுப்பிரமணியும்... அப்துல்லா அந்தோணியும்!

Tags: ajith citizen movie citizen30 30 year of citizen ajith citizen subramani20

தொடர்புடைய செய்திகள்

20 Years Of Citizen: அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக்கிய ‛சிட்டிசன்’ ; விமர்சனங்களை உடைத்தெறிந்த சுப்பிரமணி!

20 Years Of Citizen: அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக்கிய ‛சிட்டிசன்’ ; விமர்சனங்களை உடைத்தெறிந்த சுப்பிரமணி!

Shreya Ghoshal : ஸ்ரேயா கோஷலின் டாப் ஸ்வீட் மெலடீஸ்..!

Shreya Ghoshal : ஸ்ரேயா கோஷலின் டாப் ஸ்வீட் மெலடீஸ்..!

பாடல்.. இசை.. கலகலப்பு.. கலாய்.. ட்விட்டர் ஸ்பேசஸில் கூடிய ஜகமே தந்திரம் டீம்!

பாடல்.. இசை.. கலகலப்பு.. கலாய்.. ட்விட்டர் ஸ்பேசஸில் கூடிய ஜகமே தந்திரம் டீம்!

மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!

மனதைப் பிளக்கும் 'கேபெர்னம்' - தவறவிடவேகூடாத ஒரு உலக சினிமா!

‘தி பேமிலி மேன் 2’ தொடர்: ‛மத்திய அரசு மவுனம்... அமேசானுக்கு எச்சரிக்கை’ -பாரதிராஜா!

‘தி பேமிலி மேன் 2’ தொடர்:  ‛மத்திய அரசு மவுனம்... அமேசானுக்கு எச்சரிக்கை’ -பாரதிராஜா!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: தமிழகத்தில் 20,000-க்கு குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

Tamil Nadu Corona LIVE: தமிழகத்தில் 20,000-க்கு குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

E Pass Registration | இ-பதிவு தளத்தில் சேர்க்கப்பட்ட ஆட்டோ, பைக் ஆப்ஷன்.. முழு விவரம்!

E Pass Registration | இ-பதிவு தளத்தில் சேர்க்கப்பட்ட ஆட்டோ, பைக் ஆப்ஷன்.. முழு விவரம்!

E-pass | சென்னைக்குள் இ-பதிவு அவசியமா? சந்தேகங்களும், பதில்களும்!

E-pass | சென்னைக்குள் இ-பதிவு அவசியமா? சந்தேகங்களும், பதில்களும்!

தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் -டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் -டாக்டர் ராமதாஸ் அறிக்கை.