Aishwaryarai: நடிப்பதற்கு அவர் யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை: அபிஷேக் பச்சன் கொடுத்த நச் பதில்
தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு ஐஷ்வர்யா ராய் தன்னிடம் அனுமதி பெறத் தேவையில்லை என ரசிகர் ஒருவரின் கெமெண்டிற்கு பதில் கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்
ஐஷ்வர்யா ராயை தொடர்ந்து நிறையத் திரைப்படங்களில் நடிக்க அனுமத்திக்க வேண்டும் என ரசிகர் ஒருவரின் ட்விட்டிற்கு பதிலளித்துள்ளார் நடிகரும் ஐஷ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்த்தபின் பாலிவுட் நடிகர் மற்றும் ஐஷ்வர்யா ராயின் கணவருமான நடிகர் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தன்னை மெய்மறக்க செய்துவிட்டதாகவும் படத்தில் நடித்திருந்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். குறிப்பாக தனது மனைவி ஐஷ்வர்யா இதுவரை நடித்ததிலேயெ சிறந்த நடிப்பை இந்த படத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு ரசிகர் ஒருவர் அபிஷேக பச்சன் தனது மனைவியை மேலும் நிறைய படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்களது மகள் ஆராத்யாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டை கவனித்த அபிஷேக் பச்சன் அந்த ரசிகருக்கு நிதானமாக பதில் அளித்துள்ளார்.
ஐஷ்வர்யா ராய் திரைப்படங்களில் நடிப்பதற்கு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை அதிலும் குறிப்பாக அவர் தனது வாழ்க்கையில் மிகவும் நேசிக்கும் ஒரு விஷயத்தை செய்வதற்கு அவர் தன்னிடம் அனுமதி கேட்க தேவையில்லை எனவும் மேலும் அவர் விருப்பப்பட்டால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொள்ளலாம் என்று மிக நிதானமாக அந்த ரசிகருக்கு பதில் கூறியுள்ளார் அபிஷேக் பச்சன். அவரின் இந்த பதில் இணையதளத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, ஐஷ்வர்யாராய், ஜெயராம், ஐஷ்வர்யா லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ் என பல ஏராளமான கலைஞர்கள் நடித்திருந்தனர். ஐஷ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரமான நந்தினியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் நந்தினியின் கதாபாத்திரம் மிகக் குறைவான அளவே இடம்பெற்றிருந்தது. சில நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப் பட்டது. உலகமெங்கிலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்த பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
முதலாம் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நந்தினியின் கதாபாத்திரம் விரிவாக இடம்பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் முதல் பாகத்தில் மிகவும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஊமைராணியின் கதாபாத்திரமும் இந்த படத்தில் முக்கிய இடம்பெற்றிருக்கிறது. ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் மற்றும் நந்தினிக்கு இடையிலான காட்சிகள் இரண்டாம் பாகத்தில் மிக சிறப்பாக வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் இடையிலான காட்சியை இளையதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் அமைந்த சின்னஞ்சிறு நிலவே பாடல் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தில் ஐஷ்வர்யா ராய்க்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நிச்சயமாக ஐஷ்வர்யா ராய் மனிரத்னம் அவர்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கலாம்.