Ravi Mohan: கெனிஷாவை விடுங்க... ஆர்த்தி - ரவி மோகன் பிரச்சனை வரவே இந்த 2 பேர் தான் காரணமாம்!
கெனிஷா விவகாரம் ஒருபுறம் பத்திக்கொண்டு எரிய, ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்துக்கு என்ன காரணம் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் கல்லூரி படிப்பை முடித்த கையோடு உதவி இயக்குநராக பணியாற்றினார். அவர் பணியாற்றிய படம் தான் ஆளவந்தான். இயக்குநராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் அப்பா மோகன் தயாரிப்பில் வெளியான 'ஜெயம்' படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
இந்தப் படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்தார். இந்தப் படமும் ஹிட் கொடுக்க மழை, தாஸ், போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் தோல்வியை சந்தித்தது. பிறகு மீண்டும் மோகன் ராஜா இயக்கத்தில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில்... அந்த படங்கள் ரவி மோகனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக 'தனி ஒருவன்' திரைப்படம் ரவி மோகனை முன்னணி ஹீரோ இடத்திற்கு நகர்த்தி கொண்டுவந்தது. இந்த படத்தின் படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு தற்போது இந்த படத்தின் படத்தின் 2ஆவது பாகமும் உருவாக உள்ளது.

அதே போல் பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்கள் ஜெயம் ரவியின் திறமைக்கு கிடைத்த பொக்கிஷமான வாய்ப்புகளாக அமைந்தன. தற்போது இவரின் கைவசம் கராத்தே பாபு, பராசக்தி, ஜெனீ ஆகிய படங்கள் உள்ளன. சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வரும் ரவி மோகன் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆரவ் மற்றும் அயான் என்று 2 மகன்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். குடும்ப சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் ஆர்த்தி மற்றும் ரவி மோகன் இடையிலான விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில் தான் மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப், கண்டதை ஆண்டு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்துக்கான காரணம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ரவி மோகனின் மாமியாரன சுஜாதா விஜயகுமாருக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகன் இருக்கிறார். தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தை வளர்ப்பு மகன் சங்கர் தான் கவனித்து வந்துள்ளார். அப்போது தான் சுஜாதா விஜயகுமார் தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ரவி மோகனை வைத்து படம் பண்ண திட்டமிட்டிருக்கிறார். மேலும் தனது வளர்ப்பு மகன் சங்கர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இது ரவி மோகனுக்கு பிடிக்கவில்லை.
இதை வைத்து தனது மனைவி ஆர்த்தியிடம் அடிக்கடி சண்டையும் போட்டு வந்துள்ளார். நாளடைவில் இந்த பிரச்சனை பெரியதாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதே போன்று சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது ரவி மோகனுக்கும், அவரது மாமியாருக்கும் பட விஷயங்களில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ரவி மோகன் நடித்த சைரன் தோல்வியை கொடுத்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தான் தயாரிக்க இருந்தார். இந்தப் படத்திற்கு ரவி மோகன் ரூ.25 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். நீங்கள் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்ததால் இப்போது உங்களுக்கு மார்க்கெட் இல்லை. ஆதலால் உங்களுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
கடைசியில் தனது மருமகன் என்ற ஒரே காரணத்திற்காக ரூ.25 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி இயக்குநரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், இயக்குநரோ மறுப்பு தெரிவித்துவிட்டு வேறு வழியில்லாமல் அந்த படத்திலிருந்து அவர் விலக, ரவி மோகனுக்கு அந்த பட வாய்ப்பு பறிபோய்விட்டது. இதற்கு உன்னோட அம்மா தான் காரணம் என்று ரவி மோகன் மனைவியிடம் சண்டை போடவே குடும்பத்திற்குள் பிரச்சனை வெடித்துள்ளது. இது தான் அவர்களது பிரிவுக்கு காரணமாக அப்போது சொல்லப்பட்டது. இது போன்ற பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்க... ஒருகட்டத்தில் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விலகி தற்போது கெனிஷாவிடம் முழுமையாக சரண்டர் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.





















