AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
Aadujeevitham Movie Twitter Review: புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்குச் சென்று அங்கு சிக்கிக் கொள்ளும் நபராக பிருத்விராஜ் நடித்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் ஏற்கெனவே ரசிகர்களை உலுக்கியுள்ளது.
இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம் - தி கோட் லைஃப். அமலா பால் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உலகப் புகழ்பெற்ற நாவலான ஆடுஜீவிதம் நாவலை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது. பிரபல மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படமான பிரபல நாவல்
மலையாளத்தில் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் புத்தகம், 2009ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாடமி விருது வென்றுள்ளது. மேலும் தமிழ், ஆங்கிலம், அரபி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இப்புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவில் இருந்து சவுதிக்கு புலம்பெயர் தொழிலாளியாக செல்லும் நஜீப் எனும் கேரளாவைச் சேர்ந்த நபர், அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக சிக்கி இன்னலுக்கு உள்ளாவதை துயரம், அவல நகைச்சுவை, இறைத்தன்மை என பல உணர்வுகளுடன் சொல்லியது இந்தக் கதை. இக்கதையை படமாக்க நாவல் வெளியானது முதலே பலரும் முயன்று வருகின்றனர். இந்நிலையில், பெரும் முயற்சிகளுக்குப் பிறகு பிருத்விராஜ் நடிக்க இப்படம் 2018ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா காலங்களில் ஷூட்டிங் நடைபெற்று முடிக்கப்பட்டு, இறுதியாக இன்று வெளியாகி உள்ளது.
ட்விட்டர் விமர்சனம்
மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அனைத்து மொழிகளிலும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்த ‘எக்ஸ்’தள வாசிகள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்!
#Aadujeevitham Review@PrithviOfficial performs well. His eyes speak a lot👏@Amala_ams & others were good👍#ArRahman's BGMs👌
— Swayam Kumar Das (@KumarSwayam3) March 28, 2024
Technical Aspects - top-notch👌
Direction by @DirectorBlessy was superb😀
Rating: ⭐⭐⭐⭐/5#TheGoatLife #AadujeevithamReview #TheGoatLifeReview pic.twitter.com/TNwpeWfMNG
“பிருத்விராஜின் கண்கள் அதிகம் பேசுகின்றன. சிறப்பாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் பிஜிஎம் அருமை. தொழில்நுட்பரீதியாக வேற லெவல்” எனக் கூறியுள்ளார்.
@PrithviOfficial sir, Hats off to you!!
— 𝙈🎟️𝙑𝙄𝙀 𝙈𝘼𝙉𝙄𝘼𝘾! (@movie__maniac) March 28, 2024
You made the entire India proud. #Aadujeevitham #TheGoatLife#AadujeevithamReview#TheGoatLifeReview https://t.co/zYxPKyseGn
“பிருத்விராஜூக்கு அத்தனை அவார்டுகளையும் தூக்கிக் கொடுங்கள். நீங்கள் இந்தியாவை பெருமைடைய செய்துள்ளீர்கள்” என விமர்சனம் தெரிவித்துள்ளார்.
#PrithvirajSukumaran @PrithviOfficial The Actor🙏hatss of man acting & dedication 💥👏#Visual treat #TheGoatLife aka #Aadujeevitham is firing max .. @DirectorBlessy pic.twitter.com/RRwir2jS5Y
— Anish Babu (@Anishbkonni) March 28, 2024
“பிருத்விராஜ் என்ன ஒரு நடிகர்! இந்தப் படம் ஒரு விஷூவல் ட்ரீட்” எனக் கூறியுள்ளார்.
#Aadujeevitham is a cinematic masterpiece! It's a heart-wrenching, truly magical survival thriller that showcases @PrithviOfficial 's best performance ever. Directed by @DirectorBlessy with @arrahman's mesmerizing music, it's a movie you CANNOT miss. #MustWatch pic.twitter.com/Sm4oE2avmY
— Vignesh Krishnan (@vkv_iyer) March 28, 2024
“பிருத்விராஜ் இதுவரை நடித்ததிலேயே இது தான் பெஸ்ட். இந்தப் படம் ஒரு சினிமாட்டிக் மாஸ்டர்பீஸ்” எனக் கூறியுள்ளார்.