Marakkuma Nenjam: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி.. ஏற்பாடுகள் படுமோசம்.. மறக்காது நெஞ்சம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த இடங்களை பலர் ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.
ஏஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ கான்செர்ட்டில் ஏற்பாடுகள் படுமோசம் என்றும், டிக்கெட் வாங்கிய பலர் உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாளன்று பலத்த மழை பெய்த நிலையில், ரசிகர்களின் நலன் கருதி இசைநிகழ்ச்சி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஏஆர்ரஹ்மான் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதனையடுத்து, இசைநிகழ்ச்சி ஈசிஆர் ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. அறிவிக்கப்பட்டபடி இன்று நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ள ரசிகர்கள், “3 மணிக்கு கேட் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் 4 மணிக்கு மேல் ஆகியும் கேட் திறக்கப்படவில்லை” என்றும், கடுமையான ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்கே பல மணி நேரம் பிடித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
Looks like ARR concert was a scam#MarakkumaNenjampic.twitter.com/GCwNmhkOW2
— Rugged கிளி (@NanDhanKili) September 10, 2023
மேலும், ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த இடங்களை பலர் ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறியுள்ளனர். உச்சபட்சமாக டிக்கெட் இருந்த பலரை இடமில்லை என்று கூறி உள்ளேயே அனுமதிக்கவில்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் ஏமாற்றத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பணத்தை இழந்து திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
Stampede like situation happening in #ARRahman concert.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 10, 2023
Many are being sent out from concert.
Many aren't allowed inside despite having passes.
All price category pass holders are mixed without segregating them to their respective pass category.
Parking is also a major… pic.twitter.com/qLmZRHbYZl
Worst arrangement #MarakkumaNenjam@arrahman
— pgragesh (@rageshpg) September 10, 2023
Wasted half day 😔 pic.twitter.com/Y8JYB1D4Fi
டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்றவர்களாலேயும் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது. தண்ணீர் கிடைக்கவில்லை. கழிவறை வசதி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர். பொதுவாக ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின்போது பாசிட்டிவாக இருக்கும் சமூக வலைதளம், நேற்றைய இசைநிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடிகளால் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.