Sardar Movie Poster: ‛ஒருபக்கம் போலீஸ்.. இன்னொருபக்கம் தாத்தா’ மிரட்டும் கார்த்தி.. சர்தாரின் நியூ லுக்!
சர்தார் திரைப்படத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சர்தார் திரைப்படத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இரும்புதிரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ சர்தார்’. இந்தப்படத்தின் புகைப்படங்கள், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஒன்றிலும், வயதான தோற்றம் அளிக்கும் கதாபாத்திரம் ஒன்றிலும் கார்த்தி நடிக்கிறார்.
View this post on Instagram
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தப்படம் இந்த வருட தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இவர்களுடன் ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே தமிழில் அறிமுகமாகிறார்.
View this post on Instagram
இந்தப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
#Sardar dubbing உரையாடல்ஸ் with @Karthi_Offl sir pic.twitter.com/AAjs8JEILU
— PS Mithran (@Psmithran) July 20, 2022
இந்தப்படத்தின் போஸ்டர்கள், போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் படத்தின் இயக்குநர் மித்ரன் கார்த்தியுடன் டப்பிங் பணியில் ஈடுபட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சர்தார் படத்தில் இருந்து வித்தியாசமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.