மேலும் அறிய

South Indian Actresses as Cops: 'கர்தவ்யம்' விஜயசாந்தி முதல் 'ஜவான்' நயன்தாரா வரை... கண்டிப்பான போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த 5 நடிகைகள் 

ஜவான் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்தது போல சிறப்பான பெண் காவல் அதிகாரியாக நடித்த ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்.  

தென்னிந்திய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நயன்தாரா ஒரு மிரட்டலான ஸ்ட்ரிக்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் ட்ரைலர் மூலம் தெரிய வந்ததில் இருந்து ரசிகர்கள் ஆரவாரத்தின் எதிரொலியாக இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார். நயன்தாராவுக்கு வெயிட்டேஜ் அதிகமுள்ள கதாபாத்திரம் என்பதால் பாலிவுட் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பிரமாண்டமாக செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 

South Indian Actresses as Cops: 'கர்தவ்யம்' விஜயசாந்தி முதல் 'ஜவான்' நயன்தாரா வரை... கண்டிப்பான போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த 5 நடிகைகள் 

நயன்தாரா 'ஜவான், படத்திற்கு முன்னரே 'இமைக்கா நொடிகள்' படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நேர்மையான சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். ஜவான் படத்தில் அவரின் தோற்றம் வைரலாகி வரும் இந்த வேளையில் தமிழ் சினிமாவில் மிகவும் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்த ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்:

ஜோதிகா :

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக விடாமுயற்சியுடன் போராடும் ஒரு கடினமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 

South Indian Actresses as Cops: 'கர்தவ்யம்' விஜயசாந்தி முதல் 'ஜவான்' நயன்தாரா வரை... கண்டிப்பான போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த 5 நடிகைகள் 

அனுஷ்கா ஷெட்டி :

வுமன் சென்ட்ரிக் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கைதேர்ந்தவரான அனுஷ்கா ஷெட்டி 'பாகமதி' என்ற படத்தில் சஞ்சலா ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 

அமலா பால் :

வித்தியாசமான திரைக்கதை, சவாலான கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் ஒரு சில நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா பால். 'தலைவா' படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 'குடி எடமைதே' சயின்ஸ் பிக்ஷன் வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 

கீர்த்தி சுரேஷ் :

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த 'சாணி காகிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருந்தார். மேலும் ஜெயம் ரவி நடிக்கும் ஒரு படத்திற்கும் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமாக தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. 

விஜயசாந்தி :

காவல் அதிகாரிகளாக நடித்த பெண் நடிகைகள் என்றால் அதில் முதல் இடத்தை பிடிப்பவர் என்றுமே விஜயசாந்தி தான். 'கர்தவ்யம்' படத்தில் தான் முதல் முறையாக அவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அப்படத்தில் அவரின் சிறப்பான நடிப்பை பாராட்டி  தேசிய விருது வழங்கப்பட்டது. அவரை விஜயசாந்தி ஐபிஎஸ் என்றே அழைக்கப்படுகிறார்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ

Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!

சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை

RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு

Embed widget