Aditi Shankar : ‛எங்கள் தேனாக இருந்ததற்கு நன்றி...’ மெச்சி வாழ்த்திய சூர்யா நிறுவனம்!
Actress Aditi Shankar :“அறிவுக்கொண்ட அழகியே, உங்களை விருமன படம் மூலம் அறிமுகப்படுத்தியதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’’
நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் நடிகை அதிதி சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
பிரமாண்ட இயக்குநர் அதிதி ஷங்கர் கார்த்தியின் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். நடிப்புடன் நிறுத்தாமல், மதுர வீரன் அழகுல என்ற பாடலையும் பாடி தன் திறமையை வெளிப்படித்தினார் அதிதி. ஆடல் பாடல் என கலக்கிய அதிதி ஷங்கருக்கு படத்தை தயாரித்த 2D என்டர்டெயின்மென்ட் அறிமுகமான நாயகிக்கு அவர்களின் நன்றியை தெரிவித்து கொண்டனர் “அறிவுக்கொண்ட அழகியே, உங்களை விருமன படம் மூலம் அறிமுகப்படுத்தியதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் தேனாக இருந்ததற்கு நன்றி.” என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Beauty with brains. We’re so glad we got to introduce you with #Viruman, @AditiShankarofl! Thank you for becoming our Thaenu❤️@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/JDBvf8BLYh
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 13, 2022
விருமன் படத்திற்கு பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனின் ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை, தேசிய விருது பெற்ற மண்டேலா டைரக்டர் மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். இவர் லோகேஷ் கனகராஜின் நண்பர் என்பது குறிப்பிடதக்கது. முதல் படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அதிதி அடுத்த படத்திற்கு தயார் ஆகிவிட்டார்.
View this post on Instagram
View this post on Instagram
விருமன் ப்ரொமோஷனுக்காக பல இடங்கள் சென்ற அதிதி, சண்டே அனைக்கு சண்ட போட முடியும், மண்டே அனைக்கு மண்டைய போட முடியுமா போன்ற அவரின் கடி ஜோக் மூலம் செம பிரபலமானார். அதே சமயம் பல மக்கள் அவரை ட்ரால் செய்து வந்தனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், நெகடீவான கருத்துக்களை உதறிவிட்டு சோஷியல் மீடியாக்களில் ஜாலியான வீடியோ மற்றும் அசத்தலான போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் கஞ்சா பூ கண்ணழகி.