மேலும் அறிய

2 New Serials On colors : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 3 முதல் 2 புதிய சீரியல்கள்... என்ன கதைக்களம் தெரியுமா?

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 3-ஆம் தேதி முதல் இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  பேரழகி 2 மற்றும் அர்ச்சனைப் பூக்கள் ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.  ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

சென்னை, ஜூன் 28, 2023: தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தற்போது புதிய 2 தொடர்களை சின்னத்திரைக்குக் கொண்டு வருகிறது. விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான பிணைப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பேரழகி 2 தொடர், அர்ச்சனைப் பூக்கள் - இரு சகோதரிகளின் கதை. இந்த இரண்டு தொடர்களும் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இவை கன்னடத்தில் ஹிட்டான லக்சனா மற்றும் பாக்யலஷ்மி ஆகிய தொடர்களின் டப்பிங் வெர்ஷனாகும். இந்த 2 தொடர்களும் ஜூலை 3-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளன.

பேரழகி 2 தொடரானது 2 பெண்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ள கதை.  2 குழந்தைகளை 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார். இதில் நக்க்ஷத்ரா கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை துகாராமா மற்றும் அவரது தாயாரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தானும் தனது மனைவி ஜெயாவும் நல்ல சிவப்பு நிறத்தில் இருப்பதால் , நக்க்ஷத்ரா தன்னுடைய மகளாக இருக்க முடியாது என்று அவரது தந்தை எண்ணுகிறார்.  இதை நக்ஷத்ரா ஒரு புன்னகையுடன் சகித்துக் கொண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால் அங்கும், அவரது கருப்பு நிறத்தால் தோல்வி காண்கிறார். இறுதியில் ஸ்வேதா நடிக்கும் நிகழ்ச்சியில், அவருக்கு குரல் தரும் பெண்ணாக வேலை பார்க்கிறார் நக்க்ஷத்ரா. இதனிடையே, சகுந்தலா தேவியின் (சுதே பெளவாடி) மகனான பூபதி (ஜெகன்னாத் சி) எம்பிஆர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார்.

இவர் நக்ஷத்ராவின் வீட்டில் தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்டாமல் பேயிங் கெஸ்ட்டாக தங்கியுள்ளார். டி.வி.யில் வரும் ஸ்வேதாவின் குரலில் மயங்கிய பூபதி, அது நக்க்ஷத்ராவின் குரல் என்று தெரியாமலேயே காதலிக்க ஆரம்பிக்க பிரச்சினை உருவாகிறது. பல்வேறு திருப்பங்கள், ட்விஸ்டுகளுக்குப் பின்னர் நக்க்ஷத்ரா கருப்பாக இருந்தபோதிலும் அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார் பூபதி. இதே நேரத்தில் நக் ஷத்ராவும், ஸ்வேதாவும் தங்களது உண்மையான பெற்றோரை சந்திக்கின்றனர். 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பேரழகி 2 ஒளிபரப்பாவது குறித்து நடிகை விஜயலஷ்மி கூறியதாவது: கன்னடத்தில் வந்த லக்க்ஷனா தொடரானது என்னுடைய முதல் தொடராகும். இந்தத் தொடர் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது எனக்கு திரில்லிங்கை தருகிறது. இதன்மூலம் எனக்கு புதிய பார்வையாளர்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அர்ச்சனை பூக்கள் - இரு சகோதரிகளின் கதை என்ற தொடரானது வெவ்வெறு வயது கொண்ட பெண்களைப் பற்றிய கதையாக அமைந்துள்ளது. கணவர் தாண்டவ் (சுதர்ஷன் ரங்கபிரசாத்) திட்டுவதாலும், மோசமாக நடத்துவதாலும் பாக்யாவின் (சுஷ்மா கே.ராவ் நடித்துள்ளார்) வாழ்க்கை ஆரம்பம் முதலே நரகமாக உள்ளது. இருப்பினும், பாக்யா அதை ஒரு புன்னகையுடன் கடந்து செல்கிறார். அமைதியாக இருந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் பராமரிக்கிறார். மேலும் மாமன் மகளான அனாதைப் பெண்ணான லஷ்மியை (பூமிகா ரமேஷ்) தனது சொந்த சகோதரியைப் போலவே வளர்க்கிறார். மேலும், லஷ்மிக்கு ஏற்ற நல்லவரனை தேர்வு செய்து திருமணம் செய்யவும் முடிவு செய்கிறார். இதனிடையே பாக்யாவின் வாழ்க்கை மோசமான நிலையை அடையவே, எதிர்பாராத இடங்களில் இருந்து அவருக்கு உதவி வருகிறது. பாக்யாவின் உரிமைகளைப் பெற அவரது மாமியார் அவருக்குத் துணை நிற்கிறார். லஷ்மிக்கு நல்ல கல்வியைத் தருவதற்கும், தனது காலில் சுயமாக நிற்பதற்கும், அக்காள்-தங்கை இடையே பிணைப்பை ஏற்படுத்தவும் மாமியார் உதவுகிறார். 

தொடர் குறித்து நடிகை சுஷ்மா கே. ராவ் கூரும்போது, “இந்தத் தொடரின் அனுபவத்தை தமிழக ரசிகர்கள் பெறுவார்கள் என்று எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  கதையின் களம், அதிலுள்ள கதாப்பாத்திரங்களால் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget