மேலும் அறிய

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியடைந்த மாற்றுத்திறனாளி பெண்

வி. சாலை வாக்கு சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தரையில் நகர்ந்து சென்று வாக்கு செலுத்தினர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 

 விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் வி. சாலை வாக்கு சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தரையில் நகர்ந்து சென்று வாக்கு செலுத்தினர். தேர்தலில் வாக்குச்சாவடி மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் விதிமுறை ஆனால் அதனை மாவட்டம் நிர்வாகம் பின்பற்றவில்லை.

இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி. அன்புமணி ஆகியோர் வாக்கினை பதிவு செய்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குப்பதிவாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் ஜூலை 10 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்

விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் :

இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

276 வாக்குச்சாவடி மையங்கள் 

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Third Level Randomization )  நடத்தப்பட்டது. 3 மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் , 41 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.  220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணியில் 1355 அலுவலர்கள் : 

276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும், 44 பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தலைப்பு செய்திகள்

தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget