அரவக்குறிச்சியில் வானதி சீனிவாசன் பிரச்சாரம்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாஜக வேட்பாளர்
அரவக்குறிச்சியை விட வறட்சியான ஊர் குஜராத் இப்போது அங்க போய் பாருங்கள் எவ்வளவு தொழில் வளம் வந்துள்ளது.
![அரவக்குறிச்சியில் வானதி சீனிவாசன் பிரச்சாரம்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாஜக வேட்பாளர் Vanathi Srinivasan campaign in support of BJP candidate Aravakurichi in Karur - TNN அரவக்குறிச்சியில் வானதி சீனிவாசன் பிரச்சாரம்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாஜக வேட்பாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/2385b629370793873c0fdbf24e275db21713166288349113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரவக்குறிச்சி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது 108 ஆம்புலன்ஸ்க்கு இறங்கி வந்து போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்த பாஜக வேட்பாளர் செந்தில்நாதனில் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் கலந்து கொள்ள நின்று கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வானதி சீனிவாசனை வரவேற்க நின்று கொண்டிருந்தனர். அப்போது தப்பு செட்டு அடித்துக் கொண்டிருந்தவர்களிடம் குட்டி சிறுவன் ஒருவர் அவர்கள் வைத்திருந்த தப்பு செட்டு அடிக்கும் குச்சிகளை வாங்கி தப்பிடித்து வரவேற்பு அளித்தார்.
திறந்தவெளியில் வாகனத்தில் நின்றவாறு பேசிய வானதி சீனிவாசன்: அரவக்குறிச்சியை விட வறட்சியான ஊர் குஜராத் இப்போது அங்க போய் பாருங்கள் எவ்வளவு தொழில் வளம் வந்துள்ளது. துறைமுகத்தினால் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வந்துள்ளது. ஏனென்றால் பிரதமர், இளைஞர்கள் அனைவரும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று கூறினார். பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் வந்தவுடன் கீழே இறங்கி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஓடி சென்று போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)