ஐ.பி.எஸ் முதல் பாரதிய ஜனதா மாநிலத் துணைத் தலைவர் வரை: யார் இந்த அண்ணாமலை?

காவல்துறை அதிகாரி டூ விவசாயி, விவசாயி டூ அரசியல் என அதிரடியாய் அரசியலில் நுழைந்த அண்ணாமலைக்கு தன்னுடைய முதல் தேர்தல் அனுபவம் எப்படி இருக்கும்? முதல் முயற்சியிலேயே வெற்றியடைவாரா?

கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகா சென்றார் அண்ணாமலை. தன்னுடைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்ற அவர்,கர்நாடகாவை கலக்கும் தமிழர், கர்நாடகாவின் சிங்கம் என்ற அடைமொழியில் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வந்துபோனார். தன்னுடைய காவலர் பணியை உதறிதள்ளிவிட்டு விவசாயம் பக்கம் அண்ணாமலை வந்தபோது சோஷியல் மீடியா உலகில் அதிகம் அறியப்பட்டார். அவரின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியலை நோக்கியே பயணப்பட்டது. அதன் தொடக்கமாக இருந்தது 'நம்மில் ஒரு தலைவர்' என்ற அமைப்பு. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட இடம் தற்போது அண்ணாமலை போட்டியிடும் அரவக்குறிச்சி. ஐ.பி.எஸ் முதல் பாரதிய ஜனதா மாநிலத் துணைத் தலைவர் வரை: யார் இந்த அண்ணாமலை?

ரஜினியின் வேட்பாளர் டூ நம்மில் ஒரு தலைவர்:

அரவக்குறிச்சியில் 'நம்மில் ஒரு தலைவர்' என்ற அமைப்பை தொடங்கி மக்களிடையே அறிமுகமானார் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரி டூ விவசாயி, மக்களிடையே பேசிப்பழக ஒரு அமைப்பு என பயணப்பட்ட அண்ணாமலை அரசியலின் வாசலில் சென்று நின்றார். ஆகஸ்ட் 2020ம் ஆண்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பாஜகவில் இணைவதற்கு முன்பே அண்ணாமலையை சுற்றி அரசியல் பேச்சு வரத்தொடங்கின. ரஜினி கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் கட்சி தொடங்குவேன், ஆனால் முதல்வர் வேட்பாளர் நானில்லை என ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அந்த நேரத்தில் பலரும் அண்ணாமலையை முன்னிறுத்தி பேசத்தொடங்கினர். ஐ.பி.எஸ் முதல் பாரதிய ஜனதா மாநிலத் துணைத் தலைவர் வரை: யார் இந்த அண்ணாமலை?

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலைதான் என அங்கங்கே பேச்சு அடிபட்டது. அந்த நேரத்தில் தான் அண்ணாமலை டெல்லி விசிட் அடித்து பாஜக பக்கம் இணைந்தார். பதவி ஏற்றபோது பேசிய அண்ணாமலை, கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் தான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றும் கூறினார். அவர் பேசிய சில நாட்களிலேயே பாஜவின் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார் அண்ணாமலை.

தொடக்கம் முதலே அரவக்குறிச்சியில் அறியப்பட்ட அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் அங்கு போட்டியிட விரும்பினார். அவரின் விருப்பப்பட்டி அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக சார்பில் அண்ணாமலைக்கு நேரடிப் போட்டியாக திமுக களம் இறங்கியது. திமுக சார்பில் மொஞ்சனூர் ஆர். இளங்கோ அரவக்குறிச்சியில் களமிறங்கினார். காவல்துறை அதிகாரி டூ விவசாயி, விவசாயி டூ அரசியல் என அதிரடியாய் அரசியலில் நுழைந்த அண்ணாமலைக்கு தன்னுடைய முதல் தேர்தல் அனுபவம் எப்படி இருக்கும்? முதல் முயற்சியிலேயே வெற்றியை ருசிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. 

Tags: BJP Congress Annamalai TMC bjp annamalai Election Results 2021 Assembly Election Results 2021 Assembly Election Results 2021 Live Bengal Election Results 2021 Live Bengal Election Results 2021 Assam Election Results 2021 Live Assam Election Results 2021 Kerala Election Results 2021 Kerala Election Results 2021 Live Tamil Nadu Election Results 2021 Tamil Nadu Election Results 2021 Live Assembly Election Counting Live Assembly Election Results 2021 Winners tn bjp annamalai ips annamalai karnataka ips annamalai

தொடர்புடைய செய்திகள்

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

Coimbatore Election Results: தி.மு.க. தேவை இல்லை என்கிறதா கோவை? - வாக்கு விவரத்தைப் பாருங்கள்

Coimbatore Election Results: தி.மு.க. தேவை இல்லை என்கிறதா கோவை?  - வாக்கு விவரத்தைப் பாருங்கள்

MK Stalin Oath Ceremony: அமைச்சரவையில் டெல்டா புறக்கணிப்பு; புலம்பும் திமுகவினர்

MK Stalin Oath Ceremony:  அமைச்சரவையில் டெல்டா புறக்கணிப்பு; புலம்பும் திமுகவினர்

MK Stalin First Signature: கொரோனா நிவாரண நிதி ரூ.4000; முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து

MK Stalin First Signature:  கொரோனா நிவாரண நிதி ரூ.4000; முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து

Viral Photo: எம்.கே.எஸ்., உடன் தேனீர் அருந்தும் ஓபிஎஸ்; வைரலாகும் புகைப்படம்

Viral Photo:  எம்.கே.எஸ்., உடன் தேனீர் அருந்தும் ஓபிஎஸ்; வைரலாகும் புகைப்படம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்துக்கும் கல்யாணம்! ஒரு ஸ்வீட் Talk!

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்துக்கும் கல்யாணம்! ஒரு ஸ்வீட் Talk!