ஆயிரம் விளக்கின் ஆதர்ச மருத்துவர் - யார் இந்த டாக்டர் எழிலன் ?
1980ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஏ கிருஷ்ணசாமி வெறும் 307 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சாதிக் பாஷாவை தோற்கடித்தார்.
எழிலன் நாகநாதன்: திராவிட கருத்தியல் ரீதியாக திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் எழிலன். நடந்து முடிந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில் முதன் முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டுகிறார்.
திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்களில் மிக முக்கியமானவர் எழிலன். திராவிட முற்போக்கு கருத்தியியல், தலித் அடக்குமுறை , மாநில சுயாட்சி போன்றவைகளில் எந்தவித சமரசமின்றி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்துப் பட்டம்பெற்றார். காவேரி மருத்துவமனையில் பொதுநல மருத்துவராக உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னாள் முதலவர் கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்துள்ளார். தற்போது மு. க. ஸ்டாலின் தனி மருத்துவராக இருந்து வருகிறார். இவரின், சொத்து மதிப்பு 1,18,51,770 ஆகும். இவரது துணைவியாரும் மருத்துவராக உள்ளார்.
இவரின் தந்தை மு.நாகநாதன் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்துள்ளார்.இவரின் தாய்வழி தாத்தா க. இரா.ஜமதக்னி இந்திய விடுதலைப் போராட்டவீரர் ஆவார்
ஆயிரம் விளக்கு தொகுதி சுவாரஸ்ய தகவல்கள்:
ஆயிரம் விலக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,18,537, பெண் வாக்காளர்கள் 1,23,965. மூன்றாம் பாலினத்தவர்கள் 95 என மொத்தம் 2,42,595 வாக்காளர்கள் உள்ளனர்.
1952 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதி தோற்றுவிக்கப்பட்டது. இதுவரை, 16 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், அதிகபட்சமாக திமுக வேட்பாளார் மு.க ஸ்டாலின் நான்கு முறையும் (1989, 1996, 2001, 2006) , அதிமுக வேட்பாளர் கே.ஏ கிருஷ்ணாசாமி மூன்று முறையும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இவரின் தந்தை மு.நாகநாதன் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்துள்ளார்
ஆயிரம் விளக்கு தொகுதியில், 1984 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய மு.க ஸ்டாலின் அதிமுக வேட்பாளர் கே.ஏ கிருஷ்ணாசாமியிடம் 2,292 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
ஆயிரம் விளக்கு தொகுதியின் அதிகபட்ச வாக்குப்பதிவு 1967-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியது (72.92%). இந்த தேர்தலில் தான் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1980 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஏ கிருஷ்ணசாமி வெறும் 307 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சாதிக் பாஷாவை தோற்கடித்தார்.
2006ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளார் மு.க ஸ்டாலின் வெறும் 2,468 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை தோற்க்கடித்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதியை தோற்கடித்த திமுக வேட்பாளர் கு.க செல்வம் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இது, அரசியல் வட்டாரங்களில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆயிரம் தொகுதியின் முன்னாள் வேட்பாளருக்கு மருத்துவராக இருந்த எழிலன் இன்று அதே ஆயிரம் விளக்குத் தொகுதியின் வேட்பாளராக பாரதிய ஜனதாவின் குஷ்புவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார்!