மேலும் அறிய
Advertisement
Lok Sabha Election 2024: 5 பேருக்கு மட்டுமே அனுமதி.. வேட்புமனு தாக்கல் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட தொடங்கி விட்டது. இப்படியான நிலையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
அதன்படி,
- ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.டி.ஓ அலுவலகங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெறுவார்கள் என்றும், அவர்கள் இல்லாத பட்சத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பெறுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
- வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையத்தில் இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பத்தை கணினியிலேயே தட்டச்சு செய்து பின்னர் பிரிண்ட் எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம். இதில் தேவையான ஆவணங்களையும் இணைத்து கொள்ள வேண்டும்.
- வேட்புமனு தாக்கலுடன் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகையாக அளிக்க வேண்டும். தனி தொகுதி வேட்பாளருக்கு ரூ.12, 500 டெபாசிட் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் அவரையும் சேர்த்து, மொத்த 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்புமனு பெறும் நிகழ்வு அனைத்து வீடியோ பதிவு செய்யப்படும்.
- தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக வளாகத்தில் 100 மீட்டருக்குள் வேட்பாளர்களின் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மற்ற வாகனங்கள் தேர்தல் நடவடிக்கைக்குட்பட்டு ஆய்வு செய்யப்படும்.
- ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்தவதற்கு முந்தைய நாள் தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கி கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கு வேட்புமனு தாக்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
- வேட்புமனு தாக்கலின் போது 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட கட்சி சின்னம், கொடி என எந்த அடையாளமும் இல்லாத ஸ்டாம்ட் சைஸ் போட்டோ வழங்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களாக இருந்தால் ஒரு முகவரும், மற்ற கட்சி வேட்பாளராக இருந்தால் 10 முகவராலும் முன்மொழியப்பட வேண்டும். முன்மொழிபவர்கள் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.
- வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே நடைபெறும். அதன்பின் யாருக்கு அந்த வளாகத்தில் அனுமதியில்லை. 40 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தேர்தல் 2024
தேர்தல் 2024
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion