O Panneerselvam: ஒரு முறை கூட தோற்காத பன்னீர்செல்வத்துக்கு இந்த நிலை? ராமநாதபுரத்தில் 5 ஓபிஎஸ்களின் நிலை என்ன?
Ramanathapuram Election Result 2024: ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
Ramanathapuram Election Result 2024: ராமநாதபுரத்தில் ஒ.பன்னீர் செல்வம் பெயரில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வி முகத்திலேயே உள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதி - ஓபிஎஸ் நிலவரம்:
அதன்படி, 12.20 மணி நிலவரபடி பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னிர் செல்வம் 37 ஆயிரத்து 731 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஒச்சப்பன் பன்னீர் செல்வம் 416 வாக்குகளையும், ஒய்யா பன்னீர் செல்வம் 157 வாக்குகளையும், ஒச்சாதேவர் பன்னீர் செல்வம் 79 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதுபோக, மயிலாண்டி பன்னீர் செல்வம் 298 வாக்குகளையும், நோட்டா 848 வாக்குகளையும் பெற்றுள்ளன.
ஓபிஎஸ் முதல்முறை தோல்வி:
இதுவரை போட்டியிட்ட தேர்தலில் தோல்வியையே சந்திக்காத, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல்முறையாக தோல்வியை சந்திக்க உள்ளார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றாலும், தாமரை சின்னத்தில் போட்டியிட மறுத்ததால், பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். அதேநேரம், ஓபிஎஸ் எனும் பெயரில் மேலும் நான்கு பேர் தேர்தலில் போட்டியிட்டதால், வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது தன்னை வீழ்த்த வேண்டும் எனும் நோக்கில், அதிமுகவினர் ஏற்படுத்தும் குழப்பம் என ஓ. பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி வந்தார். இந்நிலயில் தான், ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.