மேலும் அறிய

Lok Sabha Election 2024: ஒருவழியாக கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு - 9 தொகுதிகள் என்னென்ன?

Lok Sabha Election 2024:  நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், கங்கிரஸ் எந்தெந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Lok Sabha Election 2024:  நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு:

ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின்போது, காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் உடன், புதுச்சேரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர்,  விருதுநகர், கன்னியாகுமரி  ஆகிய மக்களவைத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக, இந்த முறை மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் புதியதாக களம் காண்கிறது. மற்றபடி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் தொகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் களம் காண்கிறது.

இறுதியானது திமுக கூட்டணி:

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் புதுச்சேரி உள்ளிட்ட10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகள்:

கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இறுதியானதை தொடர்ந்து, திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகள் எவை என்பது உறுதியாகியுள்ளது.

1.வடசென்னை

 2.தென்சென்னை

3.மத்திய சென்னை

4.ஸ்ரீபெரும்புதூர் 

5.காஞ்சிபுரம்  (தனி)

6.அரக்கோணம் 

7.வேலூர் 

8.தர்மபுரி 

9.திருவண்ணாமலை
10.ஆரணி 

11.கள்ளக்குறிச்சி 

12.சேலம் 

13.ஈரோடு 

14.நீலகிரி (தனி):

15.கோயம்புத்தூர் 

16.பொள்ளாச்சி 

17.தேனி 

18.பெரம்பலூர் 

19.தஞ்சாவூர்

20.தூத்துக்குடி

21.தென்காசி (தனி)

அடுத்தகட்ட பணிகள் தீவிரம்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது. ஏற்கனவே சில கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். அதைதொடர்ந்து, மார்ச் 20ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது. 27ம் தேதியுடன் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைய உள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இணைந்துள்ளன. அதேநேரம், விரைவில் அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget