Local body election | அதிமுக தனித்து போட்டியிடுவதால் இரண்டாவது, மூன்றாம் இடத்திற்கு பெரும் போட்டி இருக்கும் - பொன்.ராதா கிண்டல்
அதிமுக தனித்து போட்டியிடுவதால், இரண்டாவது மூன்றாவது நிலைக்கு பெரும் போட்டி இருக்கும் என நம்புகின்றேன். வினாசகாலே விபரீத புத்தி என்பது போல் நடத்தி உள்ளார்கள்
தஞ்சாவூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதாரித்து பேசுவதற்காக தஞ்சை வந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, துடைப்பத்தால், அப்பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டார். முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் மக்கள் கூடி நின்று பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மக்கள் அனைவரும் பாஜகவினர் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என, உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் பாஜக மாபெரும் சக்தியாக உருவாக்க வேண்டும் என்றுள்ளார்.
இது சவால் நிறைந்த தேர்தல், செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆர்வமாகக் கூடி வருவது மட்டுமல்லாமல், பாஜ., வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்த தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ., மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் இந்த தேர்தலை பா.ஜ., சந்தித்து வருகிறது. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெகுமதி உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நிறைவேற்றி வருகிறார். பிரதமர் மோடி தஞ்சையை மேம்படுத்த வேண்டும் என்று ரூ. 1000 கோடி மதிப்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால் அந்த அளவுக்குப் பணிகள் சிறப்பாக நடைபெறவில்லை. இதை சரி செய்யும் வகையில் மாமன்றத்தை அலங்கரிக்க வேண்டுமானால், பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவினர் தேர்தலில் பணியில் மும்முரமாக துடிப்பாக ஈடுபட்டு வருகினறார்கள். தமிழகம் முழுவதும் சென்று வருகின்றேன். இதுவரை இல்லாத வகையில் மாபெரும் வெற்றியை, தேர்தல் முடிவு நாளான 22 ஆம் தேதி, பாஜக, தாமரை சின்னத்தின் ஒவ்வொரு வெற்றியும், தமிழக அரசியல் சரித்தரத்தை தலைகீழாக மாற்றி எழுதக்கூடிய மாற்றக்கூடிய ஒரு சரித்திரமாக மாறும், ஒரு யுக்தியாக மாறும். உறுதியான நம்பிக்கை இருக்கின்றது
மழையிலும் பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் நிற்பதை பார்க்கும் போது கிழக்கு மாவட்டங்களிலும் கூட தாமரை தடமாக மாறி வருகிறது என்பது தெரிகிறது. குடும்பம், குழந்தை, எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, மோடியின் நுாற்றுக்கணக்கான திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றால், தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தாமரை சின்னம் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். முதல்வரின் மகன் உதயநிதி தான் ஒரு எம்.எல்.ஏ., என்பதை உணர வேண்டும். முதல்வர் என்பது மரியாதைக்குரிய பொறுப்பு, அதன் நிழலில் நின்று அரசியல் வேலைகள் பார்க்க கூடாது.
எம்எல்ஏ, மக்கள் மத்தியில் செல்லும் போது மக்கள் கேள்வி கேட்பார்கள். நகைக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை தங்கம் தங்கத்தை கொண்டு வைத்துள்ளதா என மிக மோசமான கேவலமான விமர்சனம் செய்துள்ளார். இதற்காக, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதிமுக தனித்து போட்டியிடுவதால், இரண்டாவது மூன்றாவது நிலைக்கு பெரும் போட்டி இருக்கும் என நம்புகின்றேன். வினாசகாலே விபரீத புத்தி என்பது போல் நடத்தியுள்ளார்கள். பாஜ கட்சி சென்னை அலுவலகத்தை தாக்கப்பட்டது ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது,, ஜனநாயகத்தின் அடிப்படையில் பாஜக செயல்படும் என விரும்புகின்றோம். மோதலை, சதி அரசியலை, தமிழகத்தில் தி.மு.க., தொடர்ந்து அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினால், விபரீதம் ஏற்படும் என என்றார்.