Fact Check: கரூரில் அண்ணாமலை; தூத்துக்குடியில் ராதிகா: வலம் வரும் பாஜக வேட்பாளர் பட்டியல் - உண்மை என்ன?
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளதாக பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
தமிழ்நாட்டில் பாஜக சார்பாக, தென் சென்னையில் தமிழிசை சொந்தரராஜனும், கரூரில் மாநில தலைவர் அண்ணாமலையும், தூத்துக்குடியில் ராதிகாவும் போட்டியிடுவதாக பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, போலி செய்தி என பாஜக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பாஜக அறிவிப்பு போல வந்துள்ள இந்த செய்தி போலியானது..#FAKE pic.twitter.com/NzvHz2DCyF
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 18, 2024
பாஜக கூட்டணி:
பாஜக கூட்டணியில், அதிமுக இல்லை என உறுதியாகிவிட்டது. இந்நிலையில் நாளை சேலம் மாவட்டத்தில் நடைபெறும், பாஜக சார்பிலான பொதுக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி கே வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், நடிகர் சரத்குமார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டம் முடிவுக்கு பின்பு, பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளுக்குள் யாருக்கு எத்தனை இடங்கள், எந்த கட்சி எங்கு போட்டியிடுவது குறித்தான தகவல் வெளிவரும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, தமிழ்நாடு மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தில், அந்த பதிவை பகிர்ந்து, இது போலி செய்தி என கருத்து பதிவிட்டுள்ளது.