Madurai corporation election 2022 | “தூங்கா நகரத்தில் மனசாட்சி மட்டும் தூங்குகிறது” - மதுரையில் கமல் ஆதங்கம் !
”சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் வசதி முழுமையாகக் கிடைக்கவில்லை: இங்கு இலவசமாக ஓடுவது சாக்கடை மட்டுமே” - மதுரையில் கமலஹாசன் பேச்சு.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகாட்சியில் இன்று தேர்தல் பரபரப்புரை தீவிரமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோர் மதுரையில் பரப்புரை மேற்கொண்டனர். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கிராம பஞ்சாயத்து மக்கள் நீதி மய்யம் கண்டுபிடித்தது அல்ல. 25 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் மக்களுக்கு தெரியாத விஷயத்தை மக்களுக்கு டார்ச் லைட் அடித்து காட்டியுள்ளது. மக்கள் அதிகாரம் அவர்களிடம் கொடுத்து விட்டால் வியாபாரம் கெட்டுவிடும் என்ற பயத்தினாலேயே அதை செய்யாமல் இருந்தனர்.