மேலும் அறிய

Erode East By Election: காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்தது திமுகவா? - ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பதில்!

எதிர் அணியில் இருப்போர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது, போட்டியிடலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவுசெய்யவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

எதிர் அணியில் இருப்போர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது, போட்டியிடலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவுசெய்யவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின்கீழ் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, அங்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதற்கிடையே ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இதைத் தொடர்ந்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''திமுக காங்கிரஸ் வேட்பாளரைத் தேர்வு செய்யச் சொன்னதாகத் தெரியவில்லை. ஏனெனில் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு எடுக்கும். எனினும் எங்கள் மேலிடம் திமுகவிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்று நம்புகிறேன். களத்தில் வேலை செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். 

மக்கள் நீதி மய்யத்திடம் ஆதரவு கோர இருக்கிறோம். ஏற்கெனவே ஈரோடு கிழக்கு திமுக தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்று சந்தித்துவிட்டு, காங்கிரஸ் தலைவர் அழகிரியையும் சந்தித்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளேன். பரப்புரைக்கு வர முதல்வரைச் சந்தித்து அழைப்பு விடுத்தேன். முதல்வர் பரப்புரைக்கு வர வேண்டும். 

யார் வேட்பாளராக இருந்தாலும் எங்களுக்கு வெற்றி நிச்சயம். எதிர் அணியில் இருப்போர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது, போட்டியிடலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்'' என்று ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். 

மீண்டும் களத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்:

ஈவிகேஎஸ் இளங்கோவன், 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கோபிச்செட்டி பாளையும் MP-ஆகவும் இருந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தற்போது இருக்கும் ஈவிகேஎஸ், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மீண்டும் சட்டமன்ற தேர்தலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதன் மூலம் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget