Election 2022 EC Guidelines: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Election 2022 EC COVID-19 Guidelines உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்து வருகிறார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்து வருகிறார்.
டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “கொரோனா நேரத்தில் தேர்தல் நடத்துவது பெரிதும் சவாலானது. கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடத்தப்படும். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2.16 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 24.9 லட்சமாக உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1250 முதல் 1500 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபாலில் வாக்களிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
* 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தடை.
* ஜனவரி 15ஆம் தேதி வரை பிரசார பொதுக்கூட்டங்கள், ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
* வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை டிஜிட்டல், காணொலி வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.
* காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
* வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
No physical rally of political parties or probably candidates or any other group related to elections shall be allowed till January 15. ECI should subsequently review the situation and issues further instructions accordingly: CEC Sushil Chandra pic.twitter.com/ZmnumykSfk
— ANI (@ANI) January 8, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்