மேலும் அறிய

TVK Vijay: விஜய் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார்.. கணித்த சரத்குமார்.. மக்கள் முடிவு என்ன?

விஜய் 15 சதவிகிதம் வாக்கு பெறுவார் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கருத்து கணிப்பும் அப்படி இருந்தால் கூட விஜய் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார் என சரத்குமார் கணித்துள்ளார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க மாட்டார் என பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார். 

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என சொல்லப்படும் நிலையில் இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டியானது நிலவுகிறது. முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக பிரதமர் மோடி இன்று திருச்சியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதற்காக  பாஜக தலைவர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் திருச்சிக்கு வருகை தந்த சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம், விஜயின் செயல்பாடு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அவருக்கு செயல்பாடு என்பதே கிடையாது. பின் எதை வைத்து பேச சொல்கிறீர்கள். விஜய் மீண்டும் இலவசம் தொடர்பான வாக்குறுதிகளை அளித்துள்ளார். மற்றவர்களை குறை சொன்ன அவர் இதுபோன்ற வாக்குறுதிகளை தவிர்த்திருக்கலாம். மக்களுக்கு தேவை என்பதால் இலவசத்தை செயல்படுத்துகிறோம். இவர் அதைத் தவிர வேறு எதையாவது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கலாம். புதிய கொள்கைகள், புதிய ஆட்சி முறை பற்றி பேசியிருக்கலாம். முதலில் நான் விஜயைப் பற்றி பேச விரும்பவில்லை. ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன் என்பதை விஜய் சொல்லித்தான் ஆக வேண்டும். அதேபோல் கட்சி தொடங்கி விட்ட நிலையில் திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்று தான் சொல்ல முடியும். வேறு என்ன சொல்ல முடியும் சொல்லுங்கள். கொள்கை, கோட்பாடு இல்லாத மனிதர் அவர். 

அவருக்கு இளைஞர் கூட்டம் வருகிறது என சொல்கிறார்கள். நான் 1996ம் ஆண்டு அரசியலுக்கு வரும்போதும் இளைஞர்கள் கூட்டம் இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிகம் வந்தது. அப்போது சமூக வலைத்தளங்கள் கிடையாது. கூட்டத்தை வைத்து நாம் கணக்கு செய்ய முடியாது. அரசியல் களம் செல்லும்போது அங்கு என்ன நடக்கிறது, நிலவரம் எப்படி இருக்கும் என்பதை அங்கு சென்ற பிறகு தான் நாம் பார்க்க முடியும். விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். ஆனால் கொள்கை, கோட்பாடு இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். 

விஜய் 15 சதவிகிதம் வாக்கு பெறுவார் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கருத்து கணிப்பும் அப்படி இருந்தால் கூட விஜய் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார் என சரத்குமார் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பலமுறை சொல்லி விட்டேன். ஆனால் என்னுடன் பயணித்தவர்கள் கண்டிப்பாக போட்டியிடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்
VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
Embed widget