CM Stalin: ”ஜூன் 4 இந்தியாவுக்கு 2வது விடுதலை”; தேதி குறித்த முதலமைச்சர் ஸ்டாலின்
ஒரு ட்ரியல்லியன் டாலர் பொருளாதரத்தை எட்டுவதே தமிழ்நாட்டின் இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்
ஈரோடு சின்னியம்பாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று ஈரோடு சின்னியம்பாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான பிரகாஷ், மாதேஸ்வரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ செல்போன் தருவதாக சொன்ன அதிமுக கொடுத்தார்களா என்றால் இல்லைதான். ஆனால், மகளிருக்கு ரூ.1000 சொன்னதை நிறைவேற்றியுள்ளோம். ”தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்வதுதான் திமுக கட்சி. சொல்வதை செய்வதுதான் கலைஞர்பாணி,சொல்லாததையும் செய்வதுதான் ஸ்டாலின்பாணி. எதுவும் செய்ய மாட்டோம்; செய்தால், அதை தடுப்போம் என்பதுதான் அதிமுக-பாஜக பாணி என தெரிவித்தார்.
கன்னித்தீவு கதை கூட ஒருநாள் முடிவுறலாம். ஆனால், அதைவிட மர்மங்கள் நிறைந்தது எழுதித் தீரா அ.தி.மு.க.வின் ஊழல்கள்!
— M.K.Stalin (@mkstalin) March 31, 2024
ஊழலில் திளைத்து – பதவி சுகத்துக்காகத் தமிழ்நாட்டை அடகு வைத்த பழனிசாமியால் ஒருபோதும் மக்கள் விரோத பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது. அவரது ஊழல் குடுமி பா.ஜ.க.வின் பிடியில்!… pic.twitter.com/CtDrdqCSsg
ஊழலில் திளைத்து, பதவி சுகத்துக்காகத் தமிழ்நாட்டை அடகு வைத்த பழனிசாமியால் ஒருபோதும் மக்கள் விரோத பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது. அவரது ஊழல் பா.ஜ.க.வின் பிடியில் உள்ளது. நாட்டின் சமத்துவம் – சகோதரத்துவம் – மதச்சார்பின்மை – பன்முகத்தன்மை – அரசியல் சட்டம் உள்ளிட்ட உயரிய விழுமியங்களை அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. வீழ்ந்தது. வாக்கு எண்ணிக்கை நிறைவு நாளான ஜூன் 4 இந்தியாவுக்கு 2வது விடுதலை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழு முயற்சியோடு செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு; வளர்ச்சி என்பது சீரானதாக அனைத்து மாவட்டங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்; உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, 6 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளைப் பெற்று 14 இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறோம். மேலும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே தமிழ்நாட்டின் இலக்கு எனவும் தெரிவித்தார்.
நாமக்கல்லில் சிறப்பு முட்டை ஏற்றுமதி மையம்!
— DMK (@arivalayam) March 31, 2024
ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்!
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!
ஈரோடு மாவட்டம் பாசூரையும், நாமக்கல் மாவட்ட சோழிராமணியையும் இணைக்க இரயில்வே மேம்பாலம்!
ஈரோடு இரயில் நிலையம்… pic.twitter.com/EF1J914j8s
நாமக்கல்லில் சிறப்பு முட்டை ஏற்றுமதி மையம்,ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும். ஈரோடு மாவட்டம் பாசூரையும், நாமக்கல் மாவட்ட சோழிராமணியையும் இணைக்க இரயில்வே மேம்பாலம்,ஈரோடு இரயில் நிலையம் முதல் காங்கேயம், தாராபுரம், பழனி இரயில் நிலையம் வரை புதிய அகல ரயில் பாதைத் திட்டம்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சி போன்று, இந்திய ஒன்றியத்திலும் எல்லாருக்கும் எல்லாம் எனும் ஆட்சி அமைய வேண்டும் என்று இந்த வாக்குறுதிளைக் கொடுத்திருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.