Manipur Exit Poll 2022: மணிப்பூர் தேர்தல் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ..
ABP CVoter Final Exit Poll 2022: மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
Manipur Exit Polls 2022: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி 28ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வரும் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்தத் தேர்தல் தொடர்பாக ஏபிபி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை செய்துள்ளது. அந்தக் கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களையும், பாஜக 21 இடங்களையும், என்பிஎஃப் 4 இடங்களிலும், என்பிபி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. என்.பிஎஃப் 3 முதல் 7 இடங்களும், என்பிபி கட்சி 10 முதல் 14 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மீண்டும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP Cvoter Exit Poll 2022 LIVE: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உடனுக்குடன்..
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 17 முதல் 21 வரை இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக 21 முதல் 25 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. என்.பிஎஃப் 6 முதல் 10 இடங்களும், என்பிபி கட்சி 8 முதல் 12 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்