மேலும் அறிய

UPSC IFS Exam: இந்திய வனத்துறையில் சேரலாம்; தொடங்கிய விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, தகுதி- விவரம்!

இந்திய வனத்துறை சேவைகளில் சேர்வதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்திய வனத்துறை சேவைகளில் சேர்வதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை பணிக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary) Examination மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து முதன்மைத் தேர்வும் (Main) Examination நேர்காணலும் (screening test) நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? ( UPSC IFS Exam 2024: Application Fee)

இந்திய வனத் துறைக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ரூ.100 கட்டணத்தைச் செலுத்த வேண்டும். எனினும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்க என்ன தகுதி (Eligibility Criteria)

இந்தியக் குடிமகனாக/ குடிமகளாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 21 வயதாக இருக்கும். அதே நேரத்தில் ஆகஸ்ட் 1, 2024 அன்று 32 வயது நிறைவடைந்தவர்களாக இருக்கக் கூடாது. அதாவது ஆகஸ்ட் 2, 1992-ல் இருந்து ஆகஸ்ட் 1, 2003 வரை பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

என்ன படிப்பு?

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், கீழே குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல்.

அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் அல்லது விவசாயம், வனவியல் படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

UPSC IFS Exam: இந்திய வனத்துறையில் சேரலாம்; தொடங்கிய விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, தகுதி- விவரம்!

தேர்வு முறை (UPSC IFS 2024 Examination)

வழக்கமான யுபிஎஸ்சி தேர்வைப் போல, இந்தத் தேர்வும் மூன்று கட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய 3 கட்டங்களில் தேர்வு நடைபெறும். இந்திய வனத் துறையில் உள்ள 150 காலி இடங்களை நிரப்பத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • IFS முன்பதிவு இணைப்புப் பக்கமான https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
  • அதில், முதல் முறையாக விண்ணப்பிக்கும் தேர்வர்கள், பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், மொபைல் எண், இ- மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்ய வேண்டும்.

  •  

    ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், இ – மெயில் முகவரி, மொபைல் எண், ஒரு முறை பதிவு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிட்டு, ஓடிபியை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.  

முழு தகவல்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-24-engl-140224.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு அறிவிக்கையைக் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: 011-23385271/ 011-23381125/ 011-23098543 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

யுபிஎஸ்சி இணையதள முகவரி: https://upsc.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget