மேலும் அறிய

TNTET Free Coaching: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்; மாதிரித் தேர்வும் உண்டு - சேர்வது எப்படி?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடிப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21ஆம் தேதி) தொடங்கி உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடிப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21ஆம் தேதி) தொடங்கி உள்ளன. பி.எட். படிப்பு முடித்தவர்கள் அல்லது கடைசி ஆண்டு படிப்பவர்கள், பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’தமிழ்‌நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையங்களில்‌ உள்ள தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ மூலம்‌ போட்டித்‌ தேர்வுகளுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ (டிஆர்பி) நடத்தப்படும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர்‌ மாதம்‌ வெளியாக உள்ளது. மேலும்‌ இத்தேர்வு தொடர்பான விவரங்கள்‌ அறிந்துகொள்ள https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்‌.

தகுதித்‌ தேர்வு காலிப் பணியிடத்திற்கான கல்வி, வயதுத் தகுதிகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

1. கல்வித் தகுதி 

முதல் தாள் - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்ச்சி அல்லது கடைசி ஆண்டு டிப்ளமோ (+2 and passed or appearing in final year of 2 Years Diploma in Elementary Education)

இரண்டாம் தாள் - பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் பி.எட். தேர்ச்சி அல்லது கடைசி ஆண்டு பி.எட். படிப்பு

2. வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. 

இதனைத்‌ தொடர்ந்து சென்னை, கிண்டியில்‌ செயல்பட்டு வரும்‌ தொழில்சார்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விற்கான கட்டணமில்லா நேரடி (ஆஃப்லைன்) பயிற்சி வகுப்புகள்‌ இன்று (21.08.2023) தொடங்கி உள்ளன. இப்பயிற்சி வகுப்பில்‌ வாரந்தோறும்‌ மாதிரி தேர்வுகளும்‌ நடத்தப்பட உள்ளன.

இந்த அலுவலகத்தால்‌ நடத்தப்படவுள்ள TET முதல் தாள் மற்றும்‌ இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொள்ள Google Form link https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8   என்ற இணைப்பை க்ளிக் செய்து தங்களின்‌ விவரங்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள்‌ அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்‌ - 9499966021 & 044-22501032. 

மின்னஞ்சல் முகவரி -peeochn@gmail.com ‘’

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, அதற்கான அறிவிப்பு, பாடத் திட்டம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமீபத்திய அறிவிப்புகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Embed widget