Group 2 Vacancy: 4 நாளில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; அதிகரிக்கப்பட்ட குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள்- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TNPSC Group 2 Vacancy: குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான பணியிடங்கள் 5,446-ல் இருந்து 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள் 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
நீண்ட காத்திருப்பு
இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்த தாமதம்
இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 785 அதிகரிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள், 6,231 ஆக உயர்ந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள் 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
#TNPSC #Group2
— Fr. Raj (ARM) (@ARMTNPSC) January 6, 2024
Vacancies increased
OT posts: 161, Non OT: 5990
Total: 6151 #TamilNadu 🙏🏽@CMOTamilnadu
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/