(Source: ECI/ABP News/ABP Majha)
TNPSC 2022 | டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியானது..
குரூப் 1 முதல் குரூப் 4 வரையான தேர்வுகள் மற்றும் கட்டாயத் தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல் குரூப் 4 வரையான தேர்வுகள் மற்றும் கட்டாயத் தமிழ் மொழித்தாளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிமாநிலத்தவர் அதிக அளவில் அரசு வேலைகளில் இணைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில், தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேரத் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அவர் ஆட்சிக்கு வந்தபின்னர், அரசு வேலையில் சேரத் தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. அண்மையில் இதற்கான அரசாணை வெளியானது. அதில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) ஆகிய துறைசார் தேர்வு முகமைகளில் தேர்வாக தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரூப் 1 முதல் குரூப் 4 வரையான கட்டாயத் தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கான தரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளைத் தேர்வுக்கு தயாராகுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல குரூப் 1 முதல் குரூப் 4 வரையான தேர்வுகளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!
Meendum Manjapai: அதிமுக வெள்ளைப் பை... திமுக மஞ்சப் பை... எப்போ தான் நெகிழிக்கு Bye...Bye!
புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
மாஜிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்: வெளிநாடு தப்புவதை தடுக்க நடவடிக்கை!