மேலும் அறிய

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

திருச்சி மத்திய மண்டலம் புதுகோட்டையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 2 காவல் பணியிடை நீக்கம், திருச்சி சரங்க டி.ஐ.ஜி சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மத்திய மண்டலம் போதைப்பொருள் விற்பனை தலைநகரமாக மாறிவருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்றால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் மது பிரியர்களுக்கு மதுபானம் கிடைக்காமல் இருந்ததால் அவர்கள் போதைக்காக கஞ்சா, போதை ஊசி போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆகையால் நாளடைவில் அதிக அளவில் கஞ்சா விற்பனை அதிகரித்தது. இதனால் கல்லூரி, பள்ளி மாணவர்களும் இந்த பழக்கத்திற்கு பெரும்பாலனோர் அடிமையாகினர், அதே சமயம் குற்ற சம்பவங்களும் அதிகரித்தது. போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அனைத்து பகுதிகளிலும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கண்காணிப்பை தீவிரபடுத்தி சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

இந்நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தொடர் புகாரின்பேரில் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் கடந்த 2 மாதங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன் திருக்கோகர்ணம் ரோட்டில் கஞ்சா விற்ற ஜானகி என்பவரை கைது செய்து 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தனிப்படை காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், புதுக்கோட்டை நகர காவல் நிலைய எஸ்.ஐ. சந்திரசேகர்(58), திருப்புனவாசல் காவல் நிலைய ஏட்டு முத்துகுமார் (40) ஆகியோர் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததும், புதுக்கோட்டை நகர போலீஸ் எஸ்.ஐ. அன்பழகன், இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோருக்கும் கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.ஐ. சந்திரசேகர், ஏட்டு முத்துகுமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நேற்று  இரவு அதிரடி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் குருநாதனுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. எஸ்.ஐ. அன்பழகனை அரிமளம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்தவரிடம் தீவிர விசாரனையை மேற்க்கொண்டனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் பணியாற்றிய திருப்புனவாசல் காவலர் ஏட்டு முத்துகுமார், அங்கிருந்த போது 3 மாதங்களில் கஞ்சா வியாபாரி ஜானகியுடன் 1600 முறை போனில் பேசியது தெரிய வந்தது. இதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ. இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ. மெமோ கொடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டரும் கஞ்சா வியாபாரி ஜானகியுடன் போனில் தொடர்ந்து பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகையால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டதாக திருச்சி சரங்க  காவல்துறை டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget