TNPSC Group 2, 2A Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ஆன்சர் கீ வெளியீடு- காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
TNPSC Group 2, 2A Answer Key 2025: உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள், 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45-க்குள் ஆட்சேபிக்க்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி மேலும் தெரிவித்து உள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 28.09.2025 மு.ப. நடத்தப்பட்டது. இதில் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45-க்குள் ஆட்சேபிக்க்க வேண்டும்.
ஆட்சேபணை செய்வது எப்படி?
- சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer Key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்ய முடியும்.
- இதற்கான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன.
- குறிப்பாக பொதுத் தமிழ் தேர்வை எழுதிய தேர்வர்கள் https://tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=27aca5d0-9e6e-448e-a0ac-5151425f96b9 என்ற இணைப்பை க்ளிக் செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதேபோல, பொது ஆங்கிலம் தேர்வை எழுதிய தேர்வர்கள், https://tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=cc149ec8-330e-49e0-824e-a1aae0544474 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.
- இவை இரண்டிலுமே தேர்வர்கள், தங்களின் பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாடம் மற்றும் கேள்வி எண் ஆகியவற்றை சரியாக நிரப்பி, சப்மிட் பொத்தானை அழுத்த வேண்டும்.
- அதில் தேவையான விவரங்கள் தோன்றும்.
அதே நேரத்தில் அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/






















