TNPSC Exam Postponed: ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு
நாளை நடைபெற உள்ள கட்டடக்கலை/திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வை எழுதலாம். நாளை நடைபெற உள்ள கட்டடக்கலை/திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
#JUSTIN | ஜன.9ல் நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜன.11ல் நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி.https://t.co/wupaoCQKa2 | #TNPSC | #Corona | #TNLockdown pic.twitter.com/lz592T2bOa
— ABP Nadu (@abpnadu) January 7, 2022
முன்னதாக, முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத செல்லும் தேர்வாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. தேர்வு நாளன்று தேர்வுக்கூட அனுமதிசீட்டு அல்லது அழைப்பு கடிதத்தை காண்பித்து பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.ஸி/டி.என்.பி.எஸ்.ஸி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுபோன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு மற்றும் காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Exam Fees | தமிழ் பயிற்று மொழி: மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை: அரசுத் தேர்வுகள் துறை அதிரடி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்