மேலும் அறிய

TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?

தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்கவேண்டும்.

அருணுக்கு 29 வயது. பட்டப்படிப்பை முதல் வகுப்பில் முடித்துவிட்டு வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அரசுப் பணி மீது அருணுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை முயற்சித்துப் பார்ப்பதில் ஏனோ தயக்கம் அவருக்கு.

அரசுப்பணி என்றாலே எல்லோரும் தயங்குவதற்குக் காரணம் அசாத்தியப் பொறுமையும், அபார உழைப்பும், காத்திருப்பும் தேவைப்படும் என்பதுதான். ஆனால் முதல் முறை தேர்விலேயே வெற்றி பெற்றுப் பணியில் சேர்வதும் சாத்தியம்தான். நம் முன்னாலேயே இதற்கான முன்னுதாரணர்கள் ஏராளமாய் இருக்கின்றனர்.

ஒருவர் முதல்முறையாகப் படித்துத் தேர்வெழுதும்போது, பெரும்பாலும் தேவையான மதிப்பெண்களைப் பெறுவதைக் கடினமாக உணர்ந்திருக்கலாம். இரண்டாவது முறை எழுதும்போது மதிப்பெண்கள் கிடைத்தாலும், நூலிழையில் பலர் வேலையைத் தவறவிட்டிருக்கலாம். 3வது முறை முயற்சித்தால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்கள். எனினும் ஒருவர் முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், முதல் முறையிலேயே உள்ளங்கையில் அரசுப் பணிக்கான உத்தரவைப் பெறலாம். 

TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?

ஒரு தேர்வுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தால், அவை அனைத்தும் நமக்கானவை என யாரும் நினைக்கக்கூடாது. அதில் பொது, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, தமிழ்வழி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பல்வேறு ஒதுக்கீடுகள் இருக்கும் என்பதால் நமக்கான போட்டியிடங்கள்  சில நூறு மட்டுமே என நினைத்துப் படிக்க வேண்டும். அதற்காக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும். இதை முன்கூட்டியே புரிந்துகொள்ள வேண்டும். 

''பொதுவாக குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை 6 முதல் 10-ம் வகுப்பு வரையான பாடப்புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. எனினும் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்களைப் படித்தால், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்கலாம். அரசியலமைப்பு (இந்திய ஆட்சியியல் ) பாடத்துக்கு மட்டும் தனி கையேடு அல்லது பட்டப்படிப்பு தரத்திலான புத்தகங்களைப் படிக்க வேண்டியது தேர்வை எதிர்கொள்ள உதவும்'' என்கிறார் போட்டித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று அரசு ஊழியராகப் பணியாற்றி வரும் நாகராஜன். 

குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய இரண்டு பகுதிகளிலும் தலா 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகளுக்குத் தேர்வு எழுத வேண்டும். 1 கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வகையில், மொத்தம் 300 மதிப்பெண்கள் கிடைக்கும். இதில் குறைந்தபட்சத் தேர்ச்சியாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்படிப் படிக்க வேண்டும்?

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் தினந்தோறும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதைவிடவும் கூடுதல் நேரம் செலவிட்டால்... அதாவது முதலீடு செய்தால், அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். 

முதலில் 6-ம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். பாடங்களை வரிகள் விடாமல், புரிந்து படிக்க வேண்டும். அடிப்படையை சரியாகப் புரிந்துகொண்டால்தான், அதன் நீட்சியாக அடுத்தடுத்த வகுப்புகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட பாடங்களைத் தெளிவாகப் படிக்க முடியும். அதேபோல புத்தகத்துக்குப் பின்னால் உள்ள பாடங்களையும், பயிற்சிகளையும் படிக்க வேண்டும். 

TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?

தூக்கம் வரும்போது...

தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கலாம். திறனறிவு (APTITUDE) கொண்ட கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். அப்போது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இவற்றின் மூலம் உறக்கத்தையும் சோர்வையும் தவிர்க்கலாம். 

ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் பாடத்தை முழுமையாக முடித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லலாம் (சோர்வு ஏற்படும் நேரத்தில் மாற்றிப் படிப்பது தாண்டி). அல்லது அடிப்படையில் (6-ம் வகுப்பில்) இருந்து ஒரு பாடத்தைப் படித்தால், அதே தரத்தில் உள்ள பிற பாடங்களைப் படிக்கலாம். இதனால் தேவையற்ற குழப்பம், மறதி ஏற்படாது. 

எதைப் படிக்க வேண்டும்?

அதேபோல முதலில் எதைப் படிக்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வமாகவும் புலமையுடனும் இருப்பர். அதேபோலப் பிடிக்காத பாடமும் இருக்கும். எந்தப் பாடத்தில் நாம் வலிமை குறைந்தவர்களாக இருக்கிறோமோ அந்தப் பாடத்தை முதலில் படித்து முடிக்க வேண்டும். 

TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?

பொது அறிவு (General Studies)பகுதி பரந்துபட்ட ஒன்று. இதில், பொது அறிவியல் (GENERAL SCIENCE), நடப்பு நிகழ்வுகள் (CURRENT EVENTS), புவியியல் (GEOGRAPHY), வரலாறு (HISTORY), இந்திய ஆட்சியியல் (INDIAN POLITY), பொருளாதாரம்  (INDIAN ECONOMY), இந்திய தேசிய இயக்கம் (INDIAN NATIONAL MOVEMENT), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMILNADU ), தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU) ஆகிய 9 பகுதிகள் உள்ளன. 

இந்த 9 பகுதிகளில் இருந்து மொத்தம் 75 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (APTITUDE & MENTAL ABILITY TESTS) பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இருக்கும். இவை அனைத்தையும் படித்தால்தான் 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியும். 

ஆனால் பொதுத் தமிழ் (General Tamil) அப்படியல்ல. தமிழை மட்டும் முழுமையாகப் படித்தாலே 100 கேள்விகளில் 95 கேள்விகளுக்காகவது சரியாக பதிலளிக்க முடியும். சரி, அதிக மதிப்பெண்களை அள்ளித் தரும் தமிழை எப்படிப் படிக்க வேண்டும்?
 
- பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget