மேலும் அறிய

TNEA Admission 2024: இன்றே கடைசி; பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இதோ வழிகாட்டி!

TNEA Admission 2024: பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம், கட்டணம் செலுத்தி சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்று ( ஜூன் 11) கடைசித் தேதி ஆகும். இதற்கு மேல் சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்படாது என பொறியியல் சேர்க்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 440-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் சுமார் 1.5 லட்சம் இடங்களில் இளநிலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், இணைய வழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 

இந்தக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அரசு, அரசு உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர,விண்ணப்பப் பதிவு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மே 6ஆம் தேதி அன்றே இணையம் மூலம் தொடங்கியது. மாணவர்கள் இணையம் மூலம் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.  

2.49 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக இறுதி நாளான ஜூன் 6 அன்று வரை, 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர். 1 லட்சத்து 78 ஆயிரத்து 180 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்தனர். 

இந்த நிலையில் மாணவர்கள் விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து அவகாசம் ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மாணவர்கள் இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம், கட்டணம் செலுத்தி சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

* பொறியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

* ஏற்கெனவே முன்பதிவு செய்யாதோர், https://www.tneaonline.org/user/register  என்ற இணைப்பை க்ளிக் செய்து, போதிய விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.

* இணைய வசதி இல்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தரவரிசைப் பட்டியல் எப்போது?

விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னர் ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சேவை மையம் வாயிலாக, மாணவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை 11 முதல் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

கூடுதல் விவரங்களுக்குhttps://www.tneaonline.org 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget