மேலும் அறிய

TNEA Analysis: முடிந்த பொறியியல் மாணவர் சேர்க்கை; எவ்வளவு இடங்கள் நிரம்பின? எந்த படிப்புக்கு அதிக வரவேற்பு? முழு அலசல்!

TNEA 2024 Analysis: பொறியியல் மாணவர் சேர்க்கையில் எவ்வளவு இடங்கள் நிரம்பின, எந்த படிப்புக்கு அதிக வரவேற்பு, எந்தக் கல்லூரிகளில் எல்லாம் முழு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 3 கட்டக் கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வு, எஸ்சி அருந்ததியர்களுக்கான இடங்களை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றுவதற்கான கலந்தாய்வு வரை அனைத்தும் முடிவு பெற்ற நிலையில், மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீடு ஆணைகளைப் பெற்றுவிட்டனர்.

எவ்வளவு இடங்கள் நிரம்பின, எந்த படிப்புக்கு அதிக வரவேற்பு?

இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையில் எவ்வளவு இடங்கள் நிரம்பின, எந்த படிப்புக்கு அதிக வரவேற்பு, எந்தக் கல்லூரிகளில் எல்லாம் முழு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.

இதுகுறித்து மூத்த கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறி உள்ளதாவது:

2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, 1,79,950 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், 1,30,371 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதம் 49,579 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 72.45 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. இதுவே கடந்த ஆண்டு 71.17 சதவீத இடங்கள் நிரம்பி இருந்தன.

கடந்த சில ஆண்டுகளைக் காண்டிலும் இந்த ஆண்டு அதிகம்பேர் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் சில முக்கியமான படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

மெக்கானிக்கல் பொறியியல்- 8,364 காலி இடங்கள் 49.7% மட்டுமே நிரம்பின.

சிவில்-  5,434 காலி இடங்கள், 42.8% மட்டுமே நிரம்பின.

இஇஇ- 5,906 காலி இடங்கள்58.3% மட்டுமே நிரம்பின.

வேளாண் பொறியியல் 1,391 காலி இடங்கள், 44% மட்டுமே நிரம்பின.

உயிரி மருத்துவம் 1,337 காலி இடங்கள்,  68% இடங்கள் நிரம்பின.

கணினி அறிவியல் சைபர் பாதுகாப்பு 1,375 காலி இடங்கள், 69.8% இடங்கள் நிரம்பின.

கணினி அறிவியல் இயந்திர கற்றல் 1,093 காலி இடங்கள்,  74% இடங்கள் நிரம்பின.

இசிஇ  படிப்பில் 5,866  காலி இடங்கள் உள்ளன. 75% நிரம்பியுள்ளன.

கணினி அறிவியல் 5,529 காலி இடங்கள் உள்ள நிலையில்  83% இடங்கள் நிரம்பியுள்ளன.

தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அதிக வரவேற்பு

அதேநேரத்தில் AIDS எனப்படும் செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் பிரிவில் 83% இடங்கள் நிரம்பிவிட்டன. அதேபோல ஐடி பொறியியலில் 2,591 காலி இடங்கள் மட்டுமே உள்ளன. 84% இடங்கள் நிரம்பி விட்டன.

இதன்மூலம், சிவில், இஇஇ உள்ளிட்ட படிப்புகளுக்கு வரவேற்பு குறைந்திருப்பதும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

15 கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பல்

இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்ற மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 433 ஆகும். இதில் 15 கல்லூரிகள் அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் அனைத்து இடங்களையும் அனைத்து பிரிவுகளிலும் நிரப்பின. (உதாரணமாக: தொழிற்கல்வி, அரசு ஒதுக்கீடு, சிறப்பு 7.5% போன்றவை)

இந்த 15 கல்லூரிகளில் 5 கல்லூரிகள் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் ஆகும். 120 கல்லூரிகள் 90%க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. 298 கல்லூரிகள் 50%க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன.

4 கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்கள்

4 கல்லூரிகளில் 10க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அதேபோல சுமார் 80 கல்லூரிகளில் 100க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Mahindra Thar OG: தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Embed widget