(Source: Poll of Polls)
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Question Bank: . தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் இயங்கும் மாவட்ட விற்பனை மையங்களில், Question Bank எனப்படும் வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் இயங்கும் மாவட்ட விற்பனை மையங்களில், Question Bank எனப்படும் வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை எங்கு, எப்போது பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 10-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநர்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பிற்கு 3 புத்தகமும், 12ஆம் வகுப்பிற்கு 8 புத்தகமும் ஆக மொத்தம் கீழ்க்கண்ட 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாங்கி பயன்பெறுவீர்.
1) 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) …ரூ.120/-
2) 10ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.175/-
3) 10ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) …ரூ.175/-
4) 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அறிவியல் பாடப்பிரிவு) …ரூ.140/-
(தமிழ் மற்றும் ஆங்கில வழி)
5) 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (கலைப் பாடப்பிரிவு) …ரூ.140/- (தமிழ் மற்றும் ஆங்கில வழி)
6) 12ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.160/-
7) 12ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) …ரூ.160/-
8) 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.160/-
9) 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் (தமிழ் வழி) …ரூ.160/-
10) 12ஆம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) …ரூ. 70/-
11) 12ஆம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (தமிழ் வழி) …ரூ. 70/-
மாவட்ட விற்பனை மையம் (பள்ளிகள்)
மாவட்ட விற்பனை மையம் (பள்ளிகள்)
சென்னை
பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மே.நி.பள்ளி, கோடம்பாக்கம், செ-24
எம்.சி.சி. மே.நி.பள்ளி, சேத்துப்பட்டு, செ-31
சென்னை மகளிர் மே.நி.பள்ளி, மேற்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, செ-15
ஜெயகோபால் கரோடியா அரசு மே.நி.பள்ளி, திருவெற்றியூர், செ-19.
சர் இராமசாமி முதலியார் மே.நி.பள்ளி, அம்பத்தூர், செ-53.
அரசு மேல்நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர், சென்னை.
காஞ்சிபுரம்
டாக்டர்.பி.எஸ் சீனிவாசா நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்.
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, கோவூர், காஞ்சிபுரம்.
திருவள்ளுர்
ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மே.நி.பள்ளி, திருவள்ளூர்
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, சோழவரம், திருவள்ளூர்
கடலூர்
அரசு மே.நி.பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர் . (10ஆம் வகுப்பு மட்டும்)
நகராட்சி மே.நி.பள்ளி, கடலூர் . (12ஆம் வகுப்பு மட்டும்)
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, விருதாச்சலம், கடலூர்.
விழுப்புரம்
வி.ஆர்.பி. மே.நி.பள்ளி, ரங்கநாதன் ரோடு, விழுப்புரம்
வால்டர் ஸ்கடர் மே.நி.பள்ளி, ஹாஸ்பிடர் ரோடு, திண்டிவனம் விழுப்புரம்
தஞ்சாவூர்
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, மேம்பாலம். தஞ்சாவூர்
அறிஞர் அண்ணா அரசு மே.நி.பள்ளி, கும்பகோணம். தஞ்சாவூர்
நாகப்பட்டிணம்
சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம்.
சி.க.சு. அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, சேதுரஸ்தா, வேதாரண்யம்-614 810. நாகப்பட்டினம்.
திருவாரூர்
அரசு மே.நி.பள்ளி, பணங்குடி. நன்னிலம் ஒன்றியம், திருவாரூர்
அரசு மே.நி.பள்ளி, மன்னார்குடி, திருவாரூர்
மதுரை
சேதுபதி மே.நி.பள்ளி, வடக்கு வெளிவீதி, மதுரை
ஆல்அமீன் மே.நி.பள்ளி, கோ.புதூர், , மதுரை
தேனி
அரசு மே.நி.பள்ளி, அல்லிநகரம், தேனி
அரசு மாதிரி மே.நி.பள்ளி, உத்தமபாளையம், தேனி
திண்டுக்கல்
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, பழனி ரோடு, திண்டுக்கல்
இராமநாதபுரம்
டி.டி.விநாயகா மே.நி.பள்ளி, வெளிப்பட்டினம், இராமநாதபுரம்
சௌராஷ்டிரா மே.நி.பள்ளி, பரமக்குடி, இராமநாதபுரம்
விருதுநகர்
த.பெ-நா. நகரவை மகளிர் மே.நி.பள்ளி, விருதுநகர்
அ.உ.நகரவை மே.நி.பள்ளி, சிவகாசி-626002விருதுநகர்
சிவகங்கை
அரசு மகளிர் மே.நி.பள்ளி, மேலூர் ரோடு, சிவகங்கை
அரசு மகளிர் மே.நி.பள்ளி, முத்தப்பட்டணம், காரைக்குடி, சிவகங்கை
திருநெல்வேலி
முனிசிபல் மகளிர் மே.நி.பள்ளி, மீனாட்சிபுரம் திருநெல்வெலி டவுன், திருநெல்வேலி
தூத்துக்குடி
புனித லசால் மே.நி.பள்ளி, தூத்துக்குடி.
கம்மவார் பெண்கள் மே.நி.பள்ளி, 26, எட்டையாபுரம் சாலை, புதுக்கிராமம், கோவில்பட்டி-628502, தூத்துக்குடி.
கன்னியாகுமரி
எஸ்-எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.
வேலூர்
அரசு மே.நி.பள்ளி, கொணவட்டம், வேலூர்.
அரசு மகளிர் மே.நி.பள்ளி, குடியாத்தம், வேலூர்.
திருவண்ணாமலை
சண்முகா தொழிற்சாலை அரசு மே.நி.பள்ளி, திருவண்ணாமலை.
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, ஆரணி, திருவண்ணாமலை.
சேலம்
பாரதி வித்யாலயா மே.நி.பள்ளி, மரவனேரி, சேலம்.
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, சங்ககிரி, சேலம்.
நாமக்கல்
அரசு மே.நி.பள்ளி, அண்ணாசாலை, இராசிபுரம், நாமக்கல்.
அரசு மகளிர் மே.நி.பள்ளி, நாமக்கல்.
தர்மபுரி
அதியமான் அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, தர்மபுரி.
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, அரூர்-636 903. தர்மபுரி
திருச்சி
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்.
அரசு மேல்நிலைப்பள்ளி, சோமரசம்பேட்டை, திருச்சி மாவட்டம்.
கரூர்
நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி, கரூர்.
நகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோட்டைமேடு, கரூர் மாவட்டம்.
பெரம்பலூர்
தந்தை ஹேன்ஸ் ரோவர் மே.நி.பள்ளி, பெரம்பலூர்.
புதுக்கோட்டை
பிரகதாம்பாள் (ஆ) மே.நி.பள்ளி, புதுக்கோட்டை.
அரசு மாதிரி மே.நி.பள்ளி, அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.
கோயம்புத்துர்
அரசு மேல்நிலைப்பள்ளி, இராஜ வீதி, கோவை.
சமத்தூர் இராம ஐயங்கார் நகரவை மே.நி.பள்ளி, மகாலிங்கபுரம், பொள்ளாச்சி, கோவை.
ஈரோடு
அரசு மாதிரி (ம) மேல்நிலைப்பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில்,ஈரோடு.
நகரவை (ஆ) மே.நி.பள்ளி, கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.
நீலகிரி
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னூர், நீலகிரி.
அரசு மாதிரி மே.நி.பள்ளி, ஓவேலி சாலை, கூடலூர், நீலகிரி மாவட்டம்.
கிருஷ்ணகிரி
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெங்களூர் ரோடு, கிருஷ்ணகிரி.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
அரியலூர்
அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.
அரசு மாதிரி மே.நி.பள்ளி, ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்.
திருப்பூர்
கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. பள்ளி ரோடு, திருப்பூர்.
நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர் மாவட்டம்.
கள்ளக்குறிச்சி
பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, கள்ளக்குறிச்சி.
தென்காசி
ICI ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி.
2.கோமதி அம்மாள் அரசு (ஆ) மே.நி.பள்ளி, சங்கரன்கோவில், தென்காசி.
இராணிப்பேட்டை
அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, வண்டிவேடு, வாலாஜா, இராணிப்பேட்டை.
அரசு மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்.
திருப்பத்தூர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
செங்கற்பட்டு
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அழகேசன் நகர், செங்கற்பட்டு.
மயிலாடுதுறை
கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை.
S.M.H. உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, சீர்காழி, மயிலாடுதுறை.