மேலும் அறிய

Thodarnthu Karpom: படிப்பை நிறுத்திய, பள்ளி செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடக்கம்; ஒரு மாதம் நடக்கிறது..

படிப்பை நிறுத்திய, பள்ளி செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஒரு மாதம் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

படிப்பை நிறுத்திய, பள்ளி செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஒரு மாதம் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாகப் பள்ளிக்கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

’’ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌, 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து மீள பள்ளிக்கு வரவழைப்பதற்கான செயல்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்‌ திறனுடைய குழந்தைகள்‌ மற்றும்‌ இடம்‌ பெயர்ந்து வரும்‌ தொழிலாளர்களின்‌ குழந்தைகள்‌ உட்பட அனைவருமே இதில் அடக்கம். 

பள்ளியில்‌ சேர்க்கப்படாத அல்லது பள்ளிக்கு வராத குழந்தைகள்‌, பள்ளிக்கு வெளியே இருக்கும்‌ குழந்தைகளாகக்‌ கருதப்படுகின்றனர்‌. அத்தகைய குழந்தைகளை அடையாளம்‌ கண்டு தரமான கல்வியை வழங்குவது இடைநிற்றலுக்கான முக்கிய அளவுகோல்‌ ஆகும்‌.

அதைப் போன்று ஆண்டு இறுதி தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மற்றும்‌ வருகை புரியாத மாணவர்கள்‌ பள்ளிக் கல்வியினை பாதியில்‌ கைவிடும்‌ மாணவர்கள்‌ இனம்‌ கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும்‌ சிறப்புப்‌ பயிற்சிகளையும்‌ வழங்கி, தொடர்ந்து பள்ளிக்கல்வியினை தொடரச் செய்வதும்‌ 0யயின்‌ திட்டகூறுகளில்‌ ஒன்றாகும்‌. இதனைக் கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி “தொடர்ந்து கற்போம்‌” என்ற ஒரு முன்னோடி திட்டத்தினை வடிவமைத்து அதனை அரசுப்‌ பள்ளிகளில்‌ செயல்படுத்த திட்ட ஏற்பளிப்புக்‌ குழு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது .

அதன்படி, தொடர்ந்து கற்போம்‌” என்ற முன்னோடி திட்டமானது 2023- 24ஆம்‌ கல்வியாண்டில்‌ அனைத்து மாவட்டங்களில்‌ செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்‌ மூலம்‌ மாவட்டங்களில்‌ பள்ளி அளவில்‌ 10ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மற்றும்‌ வருகை புரியாத மாணவர்களுக்கு அந்தந்த உயர்நிலை /  மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக்‌ கொண்டு கற்பிக்கப்படும். 

இந்தத் திட்டம்‌ ஜூன்‌ 01 முதல்‌ 30 வரை 30 நாட்கள்‌ திங்கள்‌ முதல்‌ சனி வரை காலை 9 மணி முதல்‌ மாலை 05:00 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

செயல்பாட்டின்‌ முக்கிய நோக்கம்

பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மற்றும்‌ தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களைத்‌ துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கச்‌ செய்வது, தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில்‌ மாணவர்கள்‌ பங்குபெறச்‌ செய்வது மற்றும்‌ விண்ணப்பித்த மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்வு எழுதி கல்வியினை தொடரச்‌ செய்வதை உறுதி செய்தலாகும்‌.

திட்டத்தின்‌ செயல்பாட்டிற்கான வழிமுறைகள்‌.

* திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை துணைத்‌ தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும்‌ தினமும்‌ காலை 09:0௦ மணி முதல்‌ 01:00 மணி வரை பாடங்களை படிக்க பயிற்சி அளிக்க வேண்டும்‌. மதியம்‌ 2 மணி முதல்‌ மாலை 05:00 மணி வரை காலையில்‌ பயின்றதை திருப்புதல்‌ செய்ய பயிற்சி வழங்குவதையும்‌ உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

* சனிக்கிழமைகளில்‌ காலை 09:00 மணி முதல்‌ 01.00 மணி வரை வாராந்திர (4 வாரங்கள்‌) தேர்வும்‌, மதியம்‌ 02:00 மணி முதல்‌ மாலை 04:00 மணி வரை வழிகாட்டலும் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வியாளர்கள்‌. பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌, முன்னாள்‌ மாணவர்கள் மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு கருத்தாளர்களைக்‌ கொண்டு ஊக்கமூட்டுதல்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்‌ , கருத்துரைகள்‌ மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

* ஒவ்வொரு பள்ளிகளிலும்‌ இத்திட்டம்‌ எவ்வாறு செயல்படும்‌ வேண்டும் என்பதை, தலைமையாசிரியர்கள்‌ ஆசிரியர்களுடன்‌ கலந்தாலோசித்து கால அட்டவணை தயாரித்து திட்டமிடுவதை கண்காணித்தல்‌ வேண்டும்‌.

* குறைந்தபட்ச கற்றல்‌ கையேடுகளைப்‌ பயன்படுத்தி வாராந்திர தேர்வுகள்‌ நடைபெறுவதை கள அலுவலர்கள்‌ உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

* இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெற உள்ள மாணவர்களின்‌ வருகை மற்றும்‌ அவர்களது வாராந்திர தேர்வுகளின்‌ மதிப்பெண்கள்‌ ஆகிய EMIS தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு அனைத்து நிலைகளிலும்‌ கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget