Japanese Course Free Training: ஜப்பான் மொழி கற்க அரசு 3 மாத இலவசப் பயிற்சி- ஆண்டுக்கு ரூ.21 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க தயாரா?
ஜப்பான் மொழியைத் தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் கற்பிக்க உள்ளது. முற்றிலும் இலவசமாக 3 மாதத்துக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் தமிழ் வழியில் ஜப்பான் மொழியைக் கற்பிக்க உள்ளது. 3 மாதங்களுக்கு இலவசமாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு நான் முதல்வன் என்னும் திட்டத்தைத் தொடங்கி, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சியும் வழிகாட்டுதலையும் அளித்து வருகிறது. அதேபோல போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் மாதாமாதம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜப்பான் மொழியைத் தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் கற்பிக்க உள்ளது. முற்றிலும் இலவசமாக 3 மாதத்துக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
3 முதல் 6 மடங்கு அதிக ஊதியம்
ஜப்பான் நாட்டில் 18 லட்சம் திறமையான ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்திய ஊதியத்தைவிட 3 முதல் 6 மடங்கு அதிக ஊதியம் கிடைக்கும்.
பொறியியல் முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் ஊதியம் அளிக்கப்படும். பொறியியல் அல்லாதவர்களுக்கு 12 முதல் 15 லட்ச ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்போது பயிற்சி?
எந்த பட்டயப் படிப்பு, ஐடிஐ படிப்பு முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் மாதத்தில் இந்த பயிற்சி தொடங்க உள்ளது. தினந்தோறும் 2 மணி நேரம், வாரத்தில் 5 நாட்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
https://t.co/D1fYykIj6Z pic.twitter.com/QYDeCrJPNh
— Naan Mudhalvan - TNSDC (@naan_mudhalvan) October 8, 2024
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள நபர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQbhsdAOXydQLVtHkZjgVpnWnszG90L8FmrgaZ0KLxxg836Q/viewform என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில், கேட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து, கூகுள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.