மேலும் அறிய

Teachers Transfer Counselling: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - முழு விவரம் இதோ

Teachers Transfer Counselling: தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசியர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசியர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாறுதல் கலந்தாய்வு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதற்காக ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழலில்  நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது.

இன்று தொடக்கம்:

இதற்கிடையே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு  கடந்த 26ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதோடு,  புதிய தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவித்து இருந்ததாவது “2022- 2023 ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ சார்பாக திருத்திய கால அட்டவணைகள்‌ வெளியிடப்பட்டது. தற்போது தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ சார்பாக கீழ்க்காணும்‌ திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறும்‌ என்பதை அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ (தொடக்கக்‌ கல்வி) தெரிவிக்கப்படுகிறது” என்பதாகும்.

திருத்திய கலந்தாய்வு அட்டவணை

வரிசை எண்‌ இயக்ககம்‌  பதவி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு நாள் திருத்திய கலந்தாய்வு தடைபெறும்‌ நாள் & கிழமை
1 தொடக்கக் கல்வி இயக்ககம்  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு
26.05.2023  வெள்ளி
 29.05.2023 திங்கள்‌
2 தொடக்கக் கல்வி இயக்ககம் இடைநிலை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள்‌)

 29.05.2023  திங்கள்‌

‌30.05.2023 செவ்வாய்

இன்று தொடங்குகிறது கலந்தாய்வு:

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, இன்று தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனை!
IND vs PAK: காயத்தால் கஷ்டம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனை!
"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!
Embed widget