TN 12th Result 2025: மாணவச் செல்வங்களே இன்று ரிசல்ட்..கூலா இருங்க! எப்படி முடிவை காண்பது? பெற்றோர்களே முக்கிய தகவல் இருக்கு!
Tamil Nadu 12th Result 2025:12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது, எப்படி பார்ப்பது என்றும் மற்றும் இதர முக்கிய தகவலை மாணவர்களுக்கு மட்டுமன்றி சுற்றத்தாருக்கும் தருவிக்கிறோம்.

2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளானது, இன்று காலை 9 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், எப்படி பார்ப்பது என்பது குறித்தும், மாணவ செல்வங்கள் கவனிக்க வேண்டிய தகவலும் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கிய தகவலை தெரிவிக்கிறோம்.
12 ஆம் வகுப்பு தேர்வு
12ஆம் வகுப்பு என்பது ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்புமுனையாகும். பள்ளிப் பருவத்தின் முடிவையும், உயர்கல்வியின் தொடக்கத்தையும் குறிக்கின்ற இந்தப் பருவம், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு கட்டமாகத் திகழ்கிறது. இன்று முடிவு என்பதால், எதிர்பார்ப்பும், பதற்றமும் இருக்கும், சிலர் இன்று விடுமுறை என்றாலும் வேகமாக எழுந்திருச்சிருப்பிங்க. எல்லாரும், உங்கள் மீது கவனம் இருப்பது போலவே இருக்கும். ஆனால், சுற்றத்தார் என்ன சொல்வார்கள் என்று எல்லாம் யோசிக்காதீங்க. நம்பிக்கையோடு, தைரியத்தோடு, ஜாலியா, எதுனாலும் பார்த்துக்கலாம் என இருங்கள்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுதான் வாழ்க்கை இல்லை:
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுதான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றால், நிச்சயம் இல்லை. அதனால், மாணவச் செல்வங்களே தேர்வு எழுதியாகிவிட்டது, முடிவும் வரப்போகிறது. இனி எதையும் மாற்ற முடியாது. ஆகையால், பதற்றமடையாமல் தேர்வு முடிவுகளை பாருங்கள்.
தேர்வில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்தால் மகிழ்ச்சி, இல்லையென்றால் வருத்தம் இருக்கும். ஆனால், இதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்க போகும், இறுதி வாய்ப்பு கிடையாது. எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டால், அதற்கடுத்த என்ன செய்யலாம் என்று, உங்கள் ஆசிரியரிடமோ அல்லது உங்களுக்கு தெரிந்த வல்லுநர்களிடமோ கலந்து ஆலோசித்து, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுங்கள்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
குறிப்பாக, பெற்றோர்களே மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம். நீங்கள்தான் அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அதனால், தைரியத்தோடு இருக்கச் சொல்லுங்கள்; ஆறுதல் கூறுங்கள். 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்து,மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்று பல சாதனையாளர்கள் உள்ளனர். மேலும், சுற்றத்தாரும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வைத்து, மாணவர்களை எடை போட வேண்டாம், ஆறுதலாக இருங்க.
என்ன! எதிர்மறையாக சொல்லப்படுகிறது என நினைக்க வேண்டாம். நல்லதே நடக்கும், இல்லையென்றாலும், நல்லதை நடக்க வைப்போம். அதற்கு என்ன செய்யலாம் என்றுதான் யோசிக்கனும் தங்கங்களே..
சரி, இன்று தேர்வு முடிவு வெளியாகிறது, எப்படி தெரிந்து கொள்வது, என்பது குறித்து, உங்களுக்கு உதவுகிறோம்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எப்படி பார்ப்பது?
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட வழிமுறைகளில் தெரிந்து கொள்ளலாம்.
- tnresults.nic.in,
- dge.tn.gov.in
- results.digilocker.gov.in
- பள்ளிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்
- உங்களது கைப்பேசிக்கு குறுஞ்ச் செய்தியும் வரும்
இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது, தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டியது முக்கியம்.
12 ஆம் வகுப்பு தேர்வு: 8.21லட்சம் மாணவர்கள்
மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. குறிப்பாக இன்று (ஏப்ரல் 8ஆம் தேதி) காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தேர்வு முடிவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.





















