மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
தீபாவளியை ஒட்டி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 9ஆம் தேதி முழு நேரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நாளை (09.11.2024 ) சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முழு வேலை நாள் ஆகும்.
2024ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி வியாழக்கிழமை அன்று வருவதால், அடுத்த நாளான வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். இதை அடுத்து, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.
தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை
தொடர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாளான நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ’’தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் தீபாவளிக்கு முந்தைய நாளாக அக்டோபர் 30 புதன் பிற்பகல், தீபாவளி நாளான அக்டோபர் 31 வியாழக்கிழமை, நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அடுத்த நாளான சனிக்கிழமை, வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமை ஆகிய நான்கரை நாட்களுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையும் வாசிக்கலாம்: PM Vidyalaxmi Scheme: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.10 லட்சம் பிணையில்லாக் கடன்; பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் பற்றி தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு முழு வேலை நாள்
தீபாவளியை ஒட்டி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 9ஆம் தேதி முழு நேரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முழு வேலை நாள் ஆகும்.
ஏற்கெனவே தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஆண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. அதில், சனிக்கிழமைகள் சில வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. வேலைநாட்களின் எண்ணிக்கயைக் குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்திய நிலையில், வேலை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: TNPSC CTSE: தயாரா தேர்வர்களே; அடுத்த தேர்வு தேதியை அறிவித்த டிஎன்பிஎஸ்சி- இதோ விவரம்!