மேலும் அறிய

TN Engineering Admission: நாளைக்கே ரெடியாகுங்க: பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: எப்படி?

Tamil Nadu Engineering Admission 2023: தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய முகவரி மூலம் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முதலாமாண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கு, தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு /அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌ / அண்ணா பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌ / அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளால்‌ ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023- 24 ஆம்‌ கல்வியாண்டில்‌ சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய ஏற்பாடு செய்யப்பட்‌டுள்ளது.

விண்ணப்பிக்கும்‌ முறை

மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யவேண்டும்‌.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க எதுவாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌- TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ நாள்‌:
துவங்கும்‌ நாள்‌: 05.05.2023 முடிவுறும்‌ நாள்‌: 04.06.2023

பதிவுக்‌ கட்டணம்‌

பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்‌ டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாக பதிவுக்‌ கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌, " “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில்‌ 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக்‌ கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்‌.

கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250. 

கலந்தாய்வு விவரங்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ கால அட்டவணையை மாணாக்கர்கள்‌ மேற்காணும்‌ இணையதள வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளலாம்‌.

மாணக்கர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்‌பொழுதே அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும்‌.

மேற்கண்ட அசல்‌ சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும்போது எதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌, அந்த குறிப்பிட்ட மாணாக்கரின்‌ பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்‌ மற்றும் மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பப்படும்‌ குறிப்பிட்ட தேதி மற்றும்‌ நேரத்தில்‌ டிஎஃப்சி மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ நேரடியாக நடைபெறும்‌.

பி.இ./ பி.டெக். (Lateral Entry and Part Time) பட்டப் படிப்பு‌ சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர்‌ வெளியிடப்படும்‌. தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget