January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
January holidays: அரையாண்டு விடுமுறையால் மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் மேலும் குஷியான தகவலாக ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் குடியரசு தினத்தையொட்டி தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.

ஜனவரியில் தொடர் விடுமுறை
விடுமுறை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அதிலும் தொடர் விடுமுறையாக வந்தால் கேட்கவா வேண்டும், நண்பர்களோடு வெளியூர்களுக்கு சுற்றுலா, உறவினர்கள் வீட்டிற்கு பயணம் செல்வார்கள். அந்த வகையில் 2026ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் குடியரசு தினத்தையொட்டி தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் குஷியில் உள்ளனர்.
மேலும் சொந்த ஊரில் வேலை கிடைக்காதவர்கள் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்கிறார்கள். இதன் காரணமாக பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் கிடைக்கும் விடுமுறை நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள்.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை
உறவினர்களோடு, நண்பர்களோடு உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் வெளியூர்கள் பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக பேருந்து, ரயில்களில் பயணிக்க முன்பதிவும் செய்துள்ளனர். இந்த நிலையில் ஆண்டின் தொடக்கமே மாணவர்களுக்கு குஷியான மாதமாக ஜனவரி அமைந்துள்ளது. அந்த வகையில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளியில் அரையாண்டு தேர்வு விடுமுறையானது ஜனவரி 5ஆம் தேதி வரை விடப்பட்டுள்ளது. எனவே ஜனவரி மாதம் முதல் வராமே மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஜனவரி- மாணவர்கள், அரசு ஊழியர்கள் குஷி
இதனை தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது (வியாழன்) அடுத்ததாக திருவள்ளுவர் நாள் ஜனவரி (வெள்ளி) 16ஆம் தேதி, உழவர் திருநாள் (சனி) ஜனவரி 17 என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனையடுத்து குடியரசு நாள் - ஜனவரி (திங்கள்) 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதோடு சேர்த்து வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் கூடுதலாக கிடைக்கவுள்ளதால். ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. மேலும் வெளியூர் செல்லும் மக்களுக்காகவும் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும், குடியரசு தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறையால் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.





















