மேலும் அறிய

SSC Exam Calendar 2023: மத்திய அரசு வேலைக்குத் தயாரா? எஸ்எஸ்சி தேர்வுகள் முழு அட்டவணை வெளியீடு- விவரம் இதோ..!

மத்திய அரசுப் பணிக்காக எஸ்எஸ்சி சார்பில் நடத்தப்படும் எம்டிஎஸ், சிஎச்எஸ்எல், சிஜிஎல், எஸ்ஐ உள்ளிட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.

மத்திய அரசுப் பணிக்காக எஸ்எஸ்சி சார்பில் நடத்தப்படும் எம்டிஎஸ், சிஎச்எஸ்எல், சிஜிஎல், எஸ்ஐ உள்ளிட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆட்சேர்ப்பு முகமை சார்பில் தேசிய அளவிலான தேர்வு நடத்தப்பட்டு,  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான எம்டிஎஸ் தேர்வு மே 2 முதல் 19 வரையிலும் ஜூன் 13 முதல் ஜூன் 30 வரையிலும் நடைபெற உள்ளது. 

அதேபோல சிஎச்எஸ்எல் இரண்டாம் கட்டத் தேர்வு (Tier II) ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான சிஜிஎல் முதல் கட்டத் தேர்வு (Tier I), ஜூலை 14 முதல்ல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 தேர்வு விண்ணப்பப் பதிவு நிறைவு

எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம், மத்திய அரசில் காலியாக உள்ள 11, 409 பணியிடங்களை ( பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள் (தோராயமாக), ஹவில்தார் - 529 பணியிடங்கள் ) நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இவை அனைத்தும் பல் திறன் தேர்வு எனப்படும் எம்.டி.எஸ். வகைமைக்குள் வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான தேர்வு மே 2 முதல் 19 வரையிலும் ஜூன் 13 முதல் ஜூன் 30 வரையிலும் நடைபெற உள்ளது. 

அதேபோல சிஎச்எஸ்எல் இரண்டாம் கட்டத் தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான சிஜிஎல் முதல் கட்டத் தேர்வு, ஜூலை 14 முதல்ல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

எம்.டி.எஸ். தேர்வைத் தமிழ் மொழியில் எழுத அனுமதி

கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், விரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது. 

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

SSC Exam Calendar 2023: மத்திய அரசு வேலைக்குத் தயாரா? எஸ்எஸ்சி தேர்வுகள் முழு அட்டவணை வெளியீடு- விவரம் இதோ..!

தேர்வு முறை

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும். முதல்கட்டத் தேர்வில் 40 வினாக்களும், 2ஆம் கட்டத் தேர்வில் 50 வினாக்களும் என மொத்தம் 90 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் அதிகபட்சம் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எஸ்எஸ்சி  தேர்வுகள் குறித்த முழுமையான அட்டவணையைக் காண: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_29032023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget