புதுச்சேரி: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.8ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
’’முன்னதாக வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசி இருந்தார்’’
புதுச்சேரியில் நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார். அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் வருகைப் பதிவு கட்டாயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரி, கல்வி துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரி மற்றும் 9,10,11,12 ஆம் வகுப்புகள் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் புதுவை, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதியில் நவம்பர் 8 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியதற்காக பிரதமர் படத்திற்கு மலர் தூவி வாழ்த்து - தபெதிகவினர் கைது
Watch Annaatthe Trailer: வந்தாரு காளையன்.. மரண மாஸ்.. வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்..!
திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்களும் அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும், 1,3,5,7ஆம் வகுப்புகளுக்கு திங்கள், புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில் பள்ளி செயல்படும். 2,4,8 ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் இயங்கும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மதிய உணவு வழங்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மழலையர் பள்ளிகள் இப்போதைக்கு திறப்பு இல்லை என்றும் அவர் தெளிவு படுத்தியுள்ளார். மாணவர்களுக்கான இலவச பேருந்து இயக்கப்படும் என்றும் வருகைப் பதிவு கட்டாயம் இல்லை என்றும் கூறிய அவர், பள்ளிக்கு வராத மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயிலலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2 நாட்களுக்கு செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்