மேலும் அறிய

ஆசிரியர்களுக்கு இனி விடிவு காலம்?- புதிய செயலியை அறிமுகம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு

இவை அனைத்துக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய  திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

பள்ளிக் கல்வித்துறை சார்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. அதேபோல ஆசிரியர்களும் கற்பித்தல், நிர்வாகம், எழுத்து, ஒருங்கிணைத்தல் பணிகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை பல்லாண்டு காலமாக முன் வைக்கின்றனர். இந்த நிலையில் இவை அனைத்துக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி இணையம் வாயிலாக கோரிக்கைகளை அனுப்பும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அண்மையில் பள்ளிக் கல்வித்துறைக்கு முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட குமரகுருபரன் ஐஏஎஸ், இந்தத் திட்டத்தைக் கொண்டு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

எப்படி செயல்படும்?

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகளைப் பதிவு செய்யலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை ஏற்கப்படுகிறதா நிராகரிக்கப்படுகிறதா என்றும் இணையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகள்

2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறி இருந்தது.

அதேபோல டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தனியாகத் தகுதித் தேர்வு நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றன.

கோட்டை முற்றுகை

இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் கடைசியில் இருந்து 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அமைச்சரின் சில அறிவிப்புகளுக்குப் பிறகு போராட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. 

எனினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ, நவம்பர் 1ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் டிசம்பர் 28ஆம் தேதி கோட்டை முற்றுகையிடப்படும்  எனவும் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதன் மூலம் ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget