மாணவர்களுக்கு ரூ.75,000 உதவித்தொகை; இவர்களுக்கு எல்லாம் நிவாரணம்- உடனே விண்ணப்பிங்க!
மாணவர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் CAPITAL LETTER-ல் மட்டும் தட்டச்சு செய்யுமாறும், ஆதார் எண் - 12 இலக்கங்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை (அ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- நிதி வழங்கப்படும்.
இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை அந்த மாணவ/ மாணவியரின் கல்விச் செலவிற்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும் எனவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நிவாரணம்
அரசாணையில் அரசு /அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை (அ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியரின் நலன் கருதி அந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2025- 2026ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.11,17,00,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து 01.10.2025 வரை பெறப்பட்ட 810 விண்ணப்பங்களுக்கு ரூ.5,94,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே தொன்னூற்று நான்கு லட்சம் மட்டும்) காப்பீடு பத்திரம் சார்ந்த மாணவர்களுக்குப் பெற்று வழங்கப்பட்டது, மேலும் இந்த நிதியாண்டில் ரூ.5,23,00,000/- தொகை மீதம் உள்ளது.
நிலுவையில் உள்ள கருத்துருக்களை அனுப்ப உத்தரவு
எனவே அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை (அ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- நிதி வழங்கப்படும் திட்டத்தின்கீழ் பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள கருத்துருக்களை உடனடியாக அனுப்பி வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனுப்புவது எப்படி?
மேலும் கருத்துருக்களுடன் 27 கலம் கொண்ட EXCEL SHEET படிவத்தில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்யும்போது, மாணவர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் CAPITAL LETTER-ல் மட்டும் தட்டச்சு செய்யுமாறும், ஆதார் எண் - 12 இலக்கங்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
பிறந்த தேதியில் DD/ MM/ YYYY என்றும், ADD- 1 ADD- 2 என்ற கலங்களைப் கண்டிப்பாக பூர்த்தி செய்தும், PINCODE தட்டச்சு செய்யும் போது 06 இலக்கங்களும் இடைவெளி இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் மாணவரின் வங்கி கணக்கு IFSC CODE-ல் 11 இலக்கங்களும் இடைவெளி இல்லாமல் பூர்த்தி செய்யவும், மற்றும் மாணவரின் வங்கி கணக்கு எண் உள்ளீடு செய்யும்போது TEXT format -ல் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் மாணவர்களின் விவரங்களை EXCEL 27 கலம் கொண்ட படிவத்தில் பூர்த்தி செய்து dsem2section@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு கையொப்பமிட்ட பிரதியினை கருத்துருக்களுடன் உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






















