QS World University Rankings 2022: முதல் 200 இடங்களில், 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்தன!
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 801-1000 என்ற தரவரிசை பிரிவில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 651-700 என்ற பிரிவிலும், 2019ம் ஆண்டு 751-800 என்ற தரவரிசை பிரிவிலும் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றிருந்தது.
2022 ஆண்டிற்கான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியல், ஆராய்ச்சி பிரிவில், பெங்களூர் ஐஐஎஸ்சி கல்வி நிறுவனம் உலகளவில் முதலாவது இடத்தை பெற்றது. மேலும், முதல் 2௦௦ இடங்களில், மூன்று இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. முதல் 400 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தர வரிசைப்பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது 18வது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் மும்பை ஐஐடி 177வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 186வது இடத்தையும் பிடித்துள்ளன.
முன்னதாக, முதல் 200 இடங்களில் இடம்பிடித்துள்ள ஐஐடி பம்பாய், ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், " பட்டியலில் இடம்பெற்ற மூன்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவில் உள்ள இன்னும் அதிக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவில் சிறப்பான இடத்தை அடையவும், இளைஞர்களின் அறிவுசார் திறனை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று பதிவிட்டார்.
Congratulations to @iiscbangalore, @iitbombay and @iitdelhi. Efforts are underway to ensure more universities and institutions of India scale global excellence and support intellectual prowess among the youth. https://t.co/NHnQ8EvN28
— Narendra Modi (@narendramodi) June 9, 2021
இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா முன்னோக்கி சென்று விஷ்வகுருவாக மாறிவருகிறது. இந்திய கல்வித்துறையுடன் தொடர்புடைய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர தரப்பினர் பற்றி எப்போதும் நினைத்து கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற குருவை பெற்றதை எண்ணி நாம் பெருமை படுகிறோம்.
Today, I'm extremely proud to share that India is taking a leap in the field of Education & Research and is emerging as a VISHVAGURU. (1/3) pic.twitter.com/qqtvIpVLgs
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 9, 2021
தேசிய கல்விக்கொள்கை 2020 போன்ற முயற்சிகள் தான், நமது கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை சர்வதேச அளவில் இடம்பெற செய்கின்றன. இதை க்யூஎஸ் மற்றும் டைம்ஸ் குரூப் வெளியிட்டுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலை பார்த்து உணர முடியும்." என்று தெரிவித்தார்.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், இம்பீரியல் கல்லூரி லண்டன், சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம் -சூரிச், இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, சிகாகோ பல்கலைக்கழகம் ஆகிய உயர்க்கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடத்தை பிடித்துள்ளன.
உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியலில் முதலிடம் பெற்ற சென்னை ஐஐடி, இந்த க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியல் 255வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 801-1000 என்ற தரவரிசை பிரிவில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 651-700 என்ற பிரிவிலும், 2019ம் ஆண்டு 751-800 என்ற தரவரிசை பிரிவிலும் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 21 மாணவர்களுக்கு ஒரு ஆசரியர் என்றளவில் விகிதம் உள்ளது.
‛கல்வியே சமூகத்திற்கான பாதை’ என வாழ்ந்த பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் காலமானார்!