அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
தகுதியும், அனுபவமும் வாய்ந்த விண்ணப்பத்தார்கள் அண்ணா பல்கலைக்கழக இணையத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவு இறக்கம் செய்யலாம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தை துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேடல் குழு வெளியிட்டது.
துணைவேந்தர் மூன்றாண்டு கால அளவுக்குப் பதவி வகிப்பார். இருப்பினும், துணைவேந்தராக பணியமர்த்தம் செய்யப்பட்ட ஒருவர் தம்முடைய அலுவலக பதவி காலத்தின் போது 70 வயதினை நிறைவு செய்தால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாக ஷீலா ராணி சுங்கத், சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி தியாரஜான ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தகுதியும், அனுபவமும் வாய்ந்த விண்ணப்பத்தார்கள் அண்ணா பல்கலைக்கழக போர்ட்டலில் உள்ள விண்ணப்பப் படிவங்களை பதிவு இறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021, ஜூன் 30ம் தேதிக்கு முன்னதாக, nodalofficer2021@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மூன்று பெயர்களைக் கொண்ட தேர்வுப் பெயர் பட்டியலை வேந்தருக்கு தேடல் குழு பரிந்துரைக்கும். இதன், அடிப்படையில் தமிழக ஆளுநர் (வேந்தர்) அடுத்த துணைவேந்தரை தேர்வு செய்வார்.
அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து, 69% இடஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதி படுத்துவது போன்ற பல்வேறு சிக்கல்களை புதிதாக பதவியேற்க போகும் துணைவேந்தர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Great to see Anna Univ VC search committee Notification invites applications for the post of VC Anna Univ today. Hopefully we get a great academician & educationist from TAMIL NADU to be the VC of Anna Univ. https://t.co/pDs8II8Qr0 pic.twitter.com/sVpZtDjw4B
— JAYAPRAKASH GANDHI (@jpgandhi) May 31, 2021
அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.
கடந்த 2018ம் ஆண்டு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் உயர் பொறுப்பில் வெளிமாநில கல்வியாளர்கள் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வந்தன.
மேலும், வாசிக்க:
துணைவேந்தர் நியமனம்: இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! - துரைமுருகன் கண்டனம்..