மேலும் அறிய

IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!

சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் குறித்த இணைய வழி போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்பது எப்படி என்று காணலாம்.

சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காக சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் சார்ந்த இணையவழிப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது .

இப்போட்டியை ஐ.ஏ.ஏ.சி ( International Astronomy and Astrophysics Competition) எனப்படும் சர்வதேச அமைப்பு மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. இந்த வானியல் சார்ந்த போட்டியானது இணைய வழியில் நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியில் யாரெல்லாம் பங்கேற்கலாம் ?

இந்தப் போட்டியானது மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 16 வயது வரை உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும் ,16 முதல்19 வயதுக்கு மேற்பட்ட வானியல் மற்றும் வான் இயற்பியல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இரண்டாம் பிரிவாகவும் , 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது பிரிவிலும் பங்கேற்கலாம்.

உங்கள் வயது பிரிவைப் பொறுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற நீங்கள் மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

முதல் நிலைத் தேர்வு:

சிக்கல்களை தீர்த்தல் என்ற தலைப்பின் அடிப்படையில் வானியல் அறிவு மற்றும் படைப்பாற்றல் திறன் ஆகியவற்றில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

முதல் நிலைப் போட்டியில் பங்கேற்க கீழ்க்காணும் இணையதளத்தில் உள்ள ஐந்து வினாக்களுக்கு கேள்விகளை கண்டறிந்து அதற்கான விடைகளை இணையவழியில் சமர்ப்பித்தால் போதுமானது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மூன்றாம் நிலை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு நிலையிலும் தேர்வு பெறும் மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கிடைக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். இறுதி நிலை தேர்வில் மிகச் சிறப்பாக பதில் அளிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 175 அமெரிக்க டாலர் ,இரண்டாம் பரிசாக 150 அமெரிக்க டாலர்கள், மூன்றாம் பரிசாக 75 அமெரிக்க டாலர் ரொக்கத்துடன் வழங்கப்படும்.

மேலும் ஒவ்வொரு உலகளாவிய பிராந்தியத்திலிருந்தும் எடுத்துக்காட்டாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கிரிட்டர் மத்திய கிழக்கு தெற்காசியா தென்கிழக்கு ஆசியா உட்பட இந்த நாடுகளிலிருந்து மிகச்சிறந்த படைப்பாளருக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க https://iaac.space/amb/gkannabiran என்ற இணையதளத்தில் 2025 ஏப்ரல் 17 (17.04.2026) ஆம் தேதிக்குள் முதல் நிலை போட்டிக்கான பதில்களை சமர்ப்பிக்க வேண்டும். மிகச்சிறந்த பங்கேற்பாளர்களுக்கு பிராந்திய அளவிலான விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

7 ஆண்டுகளாகப் போட்டி

வானியல் மற்றும் வான் இயற்பியல் திறனை வளர்க்கும் இது போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதன் மூலமாக வானியல் சார்ந்த அறிவையும் வானியற்பியல் துறையிலும், ஆராய்ச்சி துறையிலும் பள்ளி பருவத்திலேயே மாணவர்களை ஊக்குவிக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக இப் போட்டிகளுக்கான வழிகாட்டுதல்களை உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் சர்வதேச அளவில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்திய அளவிலான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக, சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் போட்டியின் தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தொலைபேசி எங்களில் தொடர்பு கொண்டு அதற்கான பயிற்சிகளையும் பெறலாம்.

மேலும் தகவல்களுக்கு,

கண்ணபிரான் - Ambassador of IAAC

கலிலியோ அறிவியல் கழகம் உடுமலை

தொலைபேசி எண்: 8778201926

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
மருத்துவக் படிப்புகளுக்கு கடும் போட்டி! புதுச்சேரி சென்டாக்கில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிப்பு!
மருத்துவக் படிப்புகளுக்கு கடும் போட்டி! புதுச்சேரி சென்டாக்கில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிப்பு!
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
NEET PG 2026: முதுகலை நீட் தேர்வில் மாற்றம்... இனி காலை, மாலை தேர்வு இல்லை.. மோசடியை தடுக்க சூப்பர் திட்டம்!
NEET PG 2026: முதுகலை நீட் தேர்வில் மாற்றம்... இனி காலை, மாலை தேர்வு இல்லை.. மோசடியை தடுக்க சூப்பர் திட்டம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget